திருவள்ளூரில் ரூ.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
18 Aug 2026, 11:34 pm

திருவள்ளூரில் ரூ.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர், ஆக. 18-திருவள்ளூரில் சேக்ரட் ஹார்ட் கம்யூனிட்டி தொண்டு நிறுவனத்தின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி, வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள 65 பேருக்கு ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் சுயதொழில் தொடங்க மாவட்ட ஆட்சியர் கவிதா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, ஆக.12 முதல் அக்.12 வரை நடைபெறும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பிரியாராஜ் மற்றும் இந்திரா செவிலியர் கல்லூரி மாணவர்களும் தொண்டு நிறுவனப் பணியாளர்களும் பங்கேற்றனர்.