தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழங்குடி மக்களின் வறுமை ஒழிப்பு நிதி முடக்கம் முதல்வர் தலையிட மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

12 May 2026, 1:54 am
பழங்குடி மக்களின் வறுமை ஒழிப்பு நிதி முடக்கம் முதல்வர் தலையிட மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

பழங்குடி மக்களின் வறுமை ஒழிப்பு நிதி முடக்கம் முதல்வர் தலையிட மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை

திருவள்ளூர், மே 11- திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கான வறுமை ஒழிப்பு சங்க நிதியை வழங்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நிதியுதவியில் பாரபட்சம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 588 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களில், 512 பொது சங்கங்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான வெள்ள நிவாரண நலிவுற்றோர் நிதி தலா ரூ. 25,000 விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 28 பழங்குடி கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வரை இந்த நிதி வழங்கப்படவில்லை.

இதனால் பழங்குடி மக்கள் நுண் நிதி நிறு வனங்களிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கட்ட முடியாமல் சொந்த ஊரை விட்டும், அரசு வழங்கிய வீடுகளை விட்டும் வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தொடரும் உயிரிழப்புகள் இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கூறுகையில், "கந்துவட்டி கொடுமையால் எல்லாபுரம் ஒன்றியத்தில் வேலு என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

பூனிமாங்காடு, கச்சூர் போன்ற பகுதிகளில் பல குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர்.

பலமுறை மனு அளித்தும் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் செல்வராணி இந்த நிதியை விடுவிக்க மறுத்து வருகிறார்" என வேதனை தெரிவித்தனர்.

முதலமைச்சருக்குக் கோரிக்கை: எனவே, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இதில் உடனடியாகத் தலையிட்டு, திருக்கண்டலம், கச்சூர், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட 28 கிராமங்களில் முடங்கியுள்ள வறுமை ஒழிப்பு சங்கங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திட்ட இயக்குநரின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், பழங்குடியினருக்கான நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரியும் திங்களன்று (மே 11) மாவட்ட ஆட்சியர் மு.பிரதாபிடம் அவர்கள் மனு அளித்தனர். -பெ.ரூபன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.