தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழங்குடியினருக்கு வீடுகள், சாலை அமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

9 hours before
பழங்குடியினருக்கு வீடுகள், சாலை  அமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

பழங்குடியினருக்கு வீடுகள், சாலை அமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம்நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

திருவள்ளூர், செப்.2-திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், தொடுகாடு கிராமத்தில் பழங்குடி இருளர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகளில் 3 ஆண்டுகளாக சாலை களைச் சீரமைக்காமலும், வீடுகளை முழுமையாகக் கட்டித் தராமலும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.

மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்டத்திற்குப் பிறகு இங்கு 217 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு, பிஎம்-ஜென்மன் உள்ளிட்ட திட்டங்களில் 110 தொகுப்பு வீடுகளும் 13 சாலைகளும் ஒதுக்கப்பட்டன. ஆனால், கொட்டப்பட்ட ஜல்லிக் கற்கள் அகற்றப்படாமல் சாலைகள் முட்களோடு கிடப்பதால் முதியோரும் குழந்தைகளும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும், வீடுகளில் கதவு, ஜன்னல் மற்றும் தரைப்பூச்சுப் பணிகளும் முடிக்கப்படாமல் உள்ளன.

இது குறித்துச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு கூறுகையில், பழங்குடி மக்களை ஏமாற்றும் அதிகாரிகளின் நடவடிக்கை ஒருவகை தீண்டாமையே ஆகும்; எனவே, பணிகளைத் தாமதப்படுத்திய அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, சாலை மற்றும் வீட்டு வசதிகளை உடனே பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.