சூறைக்காற்று: மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து சேதம்
27 May 2026, 12:33 am
<p><strong>சூறைக்காற்று: மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து சேதம்</strong></p><p> திருவள்ளூர், மே 26- திருவள்ளூர் அருகே கடம்பத்தூர், சத்தரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை வீசிய பலத்த சூறைக்காற்றால் 5 மின்கம்பங்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் விழுந்ததால் பல கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மேலும், புதுமாவிலங்கை பகுதியில் விவசாயிகளான தாஸ் மற்றும் நீலகண்டன் ஆகியோரின் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்று வயல்வெளிகளில் விழுந்து சேதமடைந்தன. மரம் மற்றும் மின்கம்பங்கள் சாலையோரம் விழுந்ததால் பெரும் விபத்துகளோ, போக்குவரத்து பாதிப்போ ஏற்படவில்லை.</p>
