முந்தய பக்கம்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ரூ.7,850 வழங்க கோரிக்கை

3 Sept 2026, 1:11 am
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு  ரூ.7,850 வழங்க கோரிக்கை

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ரூ.7,850 வழங்க கோரிக்கை

திருவள்ளூர், செப்.2-தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட 8-வது பேரவை கூட்டம் திருவள்ளூரில் சனிக்கிழமையன்று நடை பெற்றது.

மாவட்டத் தலைவர் கோ.இளங்கோவன் தலைமை வகிக்க, துணைத் தலைவர் து.மகேந்திரன் வரவேற்புரையாற்றினார். துணைத் தலைவர் ஆர்.இராமமூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் மகேஸ்வரி கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் ஆர். ஜெய ராமன் அறிக்கையையும், பொருளாளர் கு.கன்னியப்பன் வரவு செலவு கணக்கை யும் தாக்கல் செய்தனர். நிர்வாகிகள் மாசிலாமணி, சுந்தராம்பாள், குப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தீர்மானங்கள்

இப்பேரவையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 70 வயதைக் கடந்தவர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும், மேலும் திருவள்ளூர் மாவட்டத் தலைநகரிலிருந்து அனைத்துக் கிராமங்களுக்கும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக இணைச் செயலாளர் என்.மணிசேகர் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram