தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெளியூருக்கு அரசுப் பேருந்துகளை இயக்க திருவள்ளூர் ரயில் பயணிகள் கோரிக்கை

7 Aug 2026, 11:52 pm
வெளியூருக்கு அரசுப் பேருந்துகளை இயக்க திருவள்ளூர் ரயில் பயணிகள் கோரிக்கை

வெளியூருக்கு அரசுப் பேருந்துகளை இயக்க திருவள்ளூர் ரயில் பயணிகள் கோரிக்கை

திருவள்ளூர், ஆக. 7-திருவள்ளூரில் புதிதாக திறக்கப் பட்டுள்ள தமிழ் தென்றல் திருவி.க. பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் திருச்சி போன்ற வெளி மாவட்ட தலைநகரங்களுக்கு நேரடி அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணி கள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.கவிதாவை சந்தித்து, சங்கத்தின் தலைவரும் நகர்மன்ற முன்னாள் தலைவருமான ப.சுந்தரராஜன் தலைமை யில் துணைத் தலைவர் தயாநிதி, செயலாளர் எஸ்.அசோக்குமார் ஜெயின், செயற்குழு உறுப்பினர் ஆர்.குப்பன், உறுப்பினர் ஆர்.ரவிச்சந்திரன் ஆகி யோர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

புதிய பேருந்து நிலை யம் வரும் ஆகஸ்ட் 10 முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள அறிவிப்பை வரவேற்றுள்ள அச்சங்கம், கிராமப்புற மக்களின் நலன் கருதி பழைய பேருந்து நிலையத்தை மூடாமல் நகரப் பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என்றும், அங்கிருந்து இராமஞ்சேரி, பென்னாலூர்பேட்டை, தக்கோலம், திருபெரும்பு தூர் மற்றும் பூந்தமல்லிஆகிய ஊர்க ளுக்கு வழக்கம் போல பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மேலும், சென்னை - திருப்பதி மற்றும் திருப்பதி - சென்னை மார்க்கமாக இயங்கும் அனைத்துப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு கட்டணமின்றி நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதி களுக்கு கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதுடன், திரு வள்ளூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ஆட்டோ சேவையை கொண்டு வர வேண்டும் என்றும் பயணிகள் சங்கத் தலைவர்கள் அந்த மனுவில் வலி யுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.