இருளர் இன மக்களின் குடிசைகளை எரித்திருவள்ளூர், ஜூன் 3- திருவள்ளூர் மாவட்டம் பட்டரை கிரா மத்தைச் சேர்ந்த
3 Jun 2026, 11:04 pm

இருளர் இன மக்களின் குடிசைகளை எரித்திருவள்ளூர், ஜூன் 3- திருவள்ளூர் மாவட்டம் பட்டரை கிரா மத்தைச் சேர்ந்த இருளர் இன மக்களின் குடி சைகள் தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வரு வதைக் கண்டித்து, குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், அச்சத்தில் வாழும் அம்மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. க

டம்பத்தூர் ஒன்றியம், பட்டரை கிரா மத்தில் முனியம்மாள், வினோத், மைதிலி, மாணிக்கம், அனுசுயா, கார்த்திக், சங்கர், சுப்பிரமணி, நிர்மலா, வெங்கடரத்தினம் ஆகிய ஆதிதிராவிடர் மற்றும் இருளர் இன மக்கள் நீண்ட காலமாக வசித்து வந்தனர்.

இவர்களது குடிசைகளை வருவாய்த்துறை யினர் ஜெசிபி இயந்திரம் கொண்டு இடித் ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாக, 2020-ஆம் ஆண்டு வெங்கத் தூர் ஊராட்சி காருண்யா நகரில் இவர்க ளுக்கு வீடுகள் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே 30 இருளர் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இவர்களும் குடிசை அமைத்துத் தங்கினர்.

இந்த நிலையில், காருண்யா நகரில் உள்ள இக்குடிசைகளைச் சமூக விரோதி கள் திட்டமிட்டு மே 18 அன்று ஒன்றும், மே 20 அன்று ஒன்றும், மே 30 அன்று மூன்றுமாக அடுத்தடுத்து எரித்து நாசமாக்கியுள்ளனர்.

இந்த தீ விபத்தில் மக்களின் குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்து ள்ளனர்.

தகவலறிந்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். தமிழ்அரசு, மாவட்ட துணைத் தலைவர் பி. அற்புதம், ஒன்றிய துணைத் தலைவர் வடி வேலு மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் ஆகி யோர் புதனன்று (ஜூன் 3) நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி னர்.

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ஆர். தமிழ்அரசு விடுத்துள்ள அறிக்கையில், இந்த வன்செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாகக் கைது செய்து தண்டிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், தீயில் கருகிய குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட நிர்வாகம் உடனடி யாக வழங்க வேண்டும், தற்போது அவர்கள் தங்கியிருக்கும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு முறையான குடிமனை பட்டாக் களை வழங்க வேண்டும், மற்றும் பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார நிவாரணமும், தகுந்த பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.த சமூக விரோதிகளை கைது செய்க! மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்