தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரி திருவள்ளூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

23 May 2026, 12:16 am
நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரி திருவள்ளூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரி திருவள்ளூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

திருவள்ளூர், மே 22- நெல் கொள்முதல் நிலையங்களைத் தாமதமின்றி திறக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வெள்ளியன்று (மே22) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மாவட்டத்தில் 31,620 ஹெக்டர் பரப்பள வில் அறுவடை தொடங்கி, 1,77,072 மெட்ரிக் டன் மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 90 ஆயிரம் மெட்ரிக் டன் வரை கொள்முதல் செய்ய 80 நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஊத்துக்கோட்டை வட்டத்தின் குருவால், செம்பேடு, ஆவாஜிபேட்டை, காக்கவாக்கம் ஆகிய இடங்களில் இதுவரை நிலையங்கள் திறக்கப்படவில்லை.

எனவே, அந்த இடா்களில் உடனடியாக கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும், கோணி மற்றும் ஆட்கள் பற்றாக்குறையைப் போக்க வேண்டும், மூட்டைக்கு ரூ.60 வரை கமிசன் வாங்குவதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலும், என்.சி.சி.எஃப் மையங்களில் பணத்தைத் தாமதமின்றி வழங்க வேண்டும், முறையாகச் செயல்படாத அந்த மையங்களை மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு மாற்ற வேண்டும் மற்றும் ஒன்றிய அரசு உர விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் எம்.பழனி தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மாவட்டத் துணைத் தலைவர் பி.ரவி, வட்டத் தலைவர் டி.விஸ்வ நாதன், வட்டச் செயலாளர் எம்.திருப்பதி, பொருளாளர் வி.வாசுதேவன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.மாரிமுத்து, கொமக்கம்பேடு மணி, மாரிமுத்து மற்றும் மாகரல் ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.