தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவள்ளூரில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை தவிச கோரிக்கை ஆர்ப்பாட்டம்

10 hours before
திருவள்ளூரில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை தவிச கோரிக்கை ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை தவிச கோரிக்கை ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஆக. 31-திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் திங்களன்று (ஆக 31), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மா விளைச்சல் அதிகம் உள்ள திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், ஒவ்வொரு ஒன்றியத்திலும் மா சேகரிப்பு கிடங்கு அமைக்க வேண்டும், நடப்பு ஆண்டில் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தண்ணீர் இல்லாமல் காய்ந்து போன மா மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மாங்காய்களுக்கு கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும், மாமரத்திலேயே வேறொரு செடி வளர்த்து மா மரத்தையே அழிப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு மாமரத்தை பாதுகாக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ப.துளசி நாராயணன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜி சம்பத், பொருளாளர் என்.ஸ்ரீநாத், மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல்அகமது உள்ளிட்ட பலர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.