திருவள்ளூர் சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்: தலைவர்கள் வாழ்த்து
19 May 2026, 1:17 am

திருவள்ளூர் சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்: தலைவர்கள் வாழ்த்து

திருவள்ளூர், மே 18- திருவள்ளூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை இளம் காத லர்களுக்கு சாதி மறுப்பு திருமணம் நடை பெற்றது. செங்கை மாவட்ட பீடி சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் என்.முத்துக்குமார் - எம்.கெஜலட்சுமி தம்பதியரின் மகன் எம்.மதன்குமாருக்கும், முரளிதரன் - பிராணா தம்பதியரின் மகள் எம்.தர்ஷிணிக்கும் இந்த சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தலைமை தாங்க, மூத்த தோழர் ப.சுந்தரராசன் திருமணத்தை நடத்தி வைத்தார். முன்னதாக திருவள்ளூர் வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன் வரவேற்றார். இவ்விழாவில் மூத்த தோழர் கே.செல்வ ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் இ.எழில ரசன், என்.கீதா மற்றும் பீடி சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ஆர்.பலராமன் ஆகி யோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர். நிறைவாக பீடி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.முருகன் நன்றி கூறினார்.