தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அம்மோனியா வாயு கசிவு: பலி 8 ஆக உயர்வு!

yesterday
அம்மோனியா வாயு கசிவு: பலி 8 ஆக உயர்வு!

அம்மோனியா வாயு கசிவு: பலி 8 ஆக உயர்வு!

திருவள்ளூர், ஜூன் 22 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள கடல் உணவுப் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) காலை, சுமார் 120 தொழிலாளர்கள் பணி யில் இருந்தபோது அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. வாயுவைச் சுவாசித்த தொழிலாளர்களுக்கு வாய், மூக்கு, கண் மற்றும் காதுகளில் ரத்தம் வந்து, சுமார் 70-க்கும் மேற்பட்டோர் மயக்க மடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மஞ்சங்கா ரணை, செங்குன்றம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பிவைத்தனர்.

உயிரிழப்பு விவரம்

முதலில் ஜுமானி ஜுவாங் (19), மாலோதி (20) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று உயிரிழந்த னர். அதனைத் தொடர்ந்து திங்கள்கிழ மை, மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்து வமனையில் ஷபினி (22), சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கீதாஜங்கா (24), பராத்திஜங்கா (19) மற்றும் பூர்ணிமா, திலோமினி ஆகி யோர் சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்தனர். இதுவரை இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலை

மீதமுள்ள தொழிலாளர்கள் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புப் படை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சுமார் 100 பேர் முகா மிட்டுள்ளனர். காற்று மாசு குறித்து அதி காரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 140 தொழிலாளர்கள் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, வருவாய்த்துறை மூலம் உதவிகள் வழங்கப்படுகின்றன.

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமை யிலான விசாரணைக் குழு, 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கை யைச் சமர்ப்பிக்க ஆய்வு மேற்கொண்டுள் ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை அந்த நிறுவனம் இயங்காது என அதி காரிகள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சி யர் ச. கவிதா, டிஐஜி ஜி. சாசங்க் சாய், எஸ்.பி. சாய்பிரணீத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்தனர்.

பெரியபாளையம் காவல் நிலைய போலீசார், நிறுவன உரிமையாளர்கள் இருவர் மற்றும் மேலாளர் ஒருவர் என மூவரை இதுதொடர்பாகக் கைது செய் துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.