தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருத்தணி செய்தியாளர் கைது காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க டியூஜெ வலியுறுத்தல்

27 May 2026, 12:32 am
திருத்தணி செய்தியாளர் கைது  காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க டியூஜெ வலியுறுத்தல்
<p><strong>திருத்தணி செய்தியாளர் கைது காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க டியூஜெ வலியுறுத்தல்</strong></p><p>திருவள்ளூர், மே 26 - திருத்தணி செய்தியாளர் மீது பொய் வழக்கு பதிவு செய்து இரவு முழுவதும் அலைகழித்த காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பத்திரி கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் தமிழ்நாடு முதல மைச்சர் ஜோசப் விஜயிடம் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் (டியூஜெ) வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகேயுள்ள தரணிவராகபுரம் கிராம ஏரியில் அரசு விதிமுறைகளை மீறி 20 அடி ஆழத்திற்கு செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் தகவல் அளிக்க, மாலை முரசு செய்தியாளர் வினோத்குமார் அங்கு சென்று வீடியோ எடுத்தார். அப்போது முருகம்பட்டு அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து, செல்போனை பிடுங்கி உடைத்தார். மேலும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டு கொலை மிரட்டலும் விடுத்தார். இதுதொடர்பாக மே 25 அன்று திருத்தணி D1 காவல் நிலைய ஆய்வாளர் சிவகுமாரிடம் வினோத்குமார் புகார் அளித்தார். எனினும் ஆய்வாளர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், சம்பவ இடத்திலேயே இல்லாத மண் குவாரி உரிமையாளரின் மனைவியிடம் பொய் புகார் பெற்று, செய்தியாளர் மீதே வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மே 25 மாலை 5 மணிக்கு அழைத்துச் சென்ற வினோத்குமாரை 9 மணி நேரத்திற்கும் மேலாக எங்கு வைத்திருக்கிறார்கள் என்ற தகவலை குடும்பத்தாருக்கோ, சக செய்தியாளர்களுக்கோ தெரிவிக்காமல் அலைகழித்தனர். செய்தியாளர்களின் தொடர் வற்புறுத்தலால் மறுநாள் அதிகாலை 2 மணிக்கு விடுவிக்கப்பட்டார். இந்த அராஜகத்தை டியூஜெ மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன், மாநில பொதுச் செயலாளர் முத்து, திருவள்ளூர் மாவட்ட தலைவர் கோவிந்தராஜுலு, மாவட்ட பொதுச் செயலாளர் கே.வெங்கடேஷ்வரலு, பொருளாளர் பெ.ரூபன் ஆகியோர் வன்மையாக கண்டனம் தெரிவித்தனர். உடைக்கப்பட்ட செல்போனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் சிபிஎம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.