தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக வேட்பாளராக இந்து முன்னணித் தலைவரின் மகன் திருப்பூர் தொழிலாளி வர்க்கம் நிச்சயம் தோற்கடிக்கும்!

6 Apr 2026, 4:15 pm
பாஜக வேட்பாளராக இந்து முன்னணித் தலைவரின் மகன் திருப்பூர் தொழிலாளி வர்க்கம் நிச்சயம் தோற்கடிக்கும்!
<p><strong>பாஜக வேட்பாளராக இந்து முன்னணித் தலைவரின் மகன் திருப்பூர் தொழிலாளி வர்க்கம் நிச்சயம் தோற்கடிக்கும்!</strong></p> <p>திருப்பூர் தெற்கு தொகுதியில் தேசிய ஜன நாயகக் கூட்டணியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக, இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிர மணியத்தின் மகன் எஸ்.தங்கராஜ் அறிவிக்கப் பட்டுள்ளார். பா.ஜ.க இத்தொகுதி யில் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்ட போதே அதன் தோல்வி உறுதி யான நிலையில், தற்போது வேட்பா ளர் அறிவிப்பு அந்தத் தோல்வியை நூறு சதவீதம் உறுதிப்படுத்தியுள்ளது. தொழிலாளி வர்க்கப் போராட்டப் பாரம்பரியம் மிக்க திருப்பூரின் இதயப் பகுதியில், உழைக்கும் மக்க ளுக்கு விரோதமான ஆர்.எஸ். எஸ் அமைப்பின் பின்புலத்து டன் பா.ஜ.க வேட்பாளர் நிறுத்தப் பட்டிருப்பது, முற்போக்கு ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாகும். திருப்பூரைப் பொறுத்த வரை, எந்தக் கட்சியைச் சேர்ந்தவ ராக இருந்தாலும், சட்டமன்ற உறு ப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட &nbsp;வர்கள் தொழிற்சங்கச் செயல்பாடும் போராட்ட அனுபவமும் கொண்ட வர்களாகவே இருந்துள்ளனர். 60 ஆண்டுகால தொழிற்சங்கப் பாரம்பரியம் 1967 மற்றும் 1972 தேர்தல் களில் வெற்றி பெற்ற திமுக-வின் &nbsp;சு.துரைசாமி தொழிற்சங்கப் பின் னணி கொண்டவர். 1984-இல் &nbsp;அதிமுக சார்பில் வென்ற மணி மாறன், தொழிற்சங்கத்தில் இல்லா விட்டாலும், முதலமைச்சர் எம்.ஜி. ஆரிடம் பேசி வரலாற்றுச் சிறப்பு மிக்க பஞ்சப்படி போராட்டத்திற்குத் தீர்வு காண உதவியவர். அதன்பிறகு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கே.சுப்பராயன் (1984, 1996), சி.கோவிந்தசாமி (1989), வெ.பழனிச்சாமி (1991) எனப் போராட்டக் களத்தில் நின்ற வர்களே மக்கள் பிரதிநிதிகளாகத் திகழ்ந்தனர். தொகுதி மறுவரை யறைக்குப் பின் 2011-இல் வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.தங்கவேல், 1984 பஞ்சப்படி போராட்டத்தின் கள நாயகனாகத் திகழ்ந்தவர். 2016-இல் அதிமுக-வின் சு.குணசேகரனும், 2021-இல் திமுக-வின் க.செல்வராஜும் தொழிற்சங்க இயக்கங்களில் பழுத்த அனுபவம் கொண்டவர்கள். தொழிலாளர் விரோத பா.ஜ.க திருப்பூரின் இந்த 60 ஆண்டு கால வரலாற்றில், இடதுசாரி கட்சிகள் மட்டுமின்றி திமுக, அதிமுக கூடத் தொழிற்சங்கப் பின்னணி கொண்டவர்களையே முன்னிறுத்தின. ஆனால், பாரதிய ஜனதா கட்சியோ தொழிலாளி வர்க்கத்திற்கும் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கும் நேர் எதிரான கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் போது, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பு கள் வன்முறை மூலம் அந்தப் போராட்டங்களைச் சீர்குலைக்க முயன்ற பல சம்பவங்கள் திருப்பூ ரில் அரங்கேறியுள்ளன. தற்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள எஸ்.தங்கராஜின் பின்புலமான இந்து முன்னணி அமைப்பு, பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் கும்பலாகவே அறியப்படுகிறது. இத்தகைய வல துசாரி பாசிசப் போக்குள்ள பா.ஜ.க வேட்பாளரைத் தோற்கடிப்பது திருப்பூர் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். அதேசமயம், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் ந.தினேஷ்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் முழு ஆதரவுடன் களம் காணும் இவரது வெற்றி உறுதி செய்யப்பட் டுள்ளது. திருப்பூரின் போராட்டப் பாரம்பரியம், பா.ஜ.க-வின் மதவாத அரசியலை வீழ்த்தி இதை நிரூபிக்கும். - வே.தூயவன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.