பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம்: விஏஓ கைது
8 Jul 2026, 1:20 am

பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம்: விஏஓ கைது

திருப்பூர், ஜூலை 7 - பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங் கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய் யப்பட்டார். திருப்பூர் மும்மூர்த்தி நகரை சேர்ந்த பனி யன் நிறுவன அதிபர் நாகமணி, தனது தந்தை யின் சொத்து பட்டாவில் ’மகன்’ என்பதற்கு பதிலாக ’மனைவி’ எனத் தவறாக வந்த பிழையை திருத்த ஆன்லைனில் மூன்று முறை விண்ணப்பித்தும் பிழை சரியாக வில்லை. இதுகுறித்து தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் (கூடுதல் பொறுப்பு) அப்துல் ரகுமானை அணுகியுள்ளார். அப் போது, பிழையை திருத்த வட்டாட்சியர் உள் ளிட்ட அதிகாரிகளுக்கும் சேர்த்து தர வேண் டும் எனக்கூறி அப்துல் ரகுமான் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத நாகமணி, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின் படி, ரசாயனப் பொடி தடவிய ரூ.5 ஆயி ரத்தை நாகமணி கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அப்துல் ரகுமானை கைது செய்தனர். இதே அலுவலகத்தில் கடந்த மாதம் 15 ஆம் தேதி யன்று ஞானசேகரன் என்ற முந்தைய வி.ஏ.ஓ. லஞ்சம் வாங்கி கைதானது குறிப்பிடத்தக் கது.