தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர்: ஊத்துக்குளி நடுநிலைப்பள்ளியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வாலிபர் சங்கம் வலியுறுத்தல்!

3 Jun 2026, 1:21 pm
திருப்பூர்: ஊத்துக்குளி நடுநிலைப்பள்ளியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வாலிபர் சங்கம் வலியுறுத்தல்!

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மைதானத்தில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றி, மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக வாலிபர் சங்கத் திருப்பூர் மாவட்ட செயலாளர் கு.பாலமுரளி, மாவட்ட ஆட்சியருக்குப் புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஊத்துக்குளி இரயிலடி அருகில் அமைந்துள்ளது. இங்கு ஊத்துக்குளி வட்டாரத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகம் மிகக் குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. தற்போது ஊத்துக்குளி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி விடுகிறது. பள்ளி வளாகத்திற்கு முன்பாகத் தார்ச்சாலை அமைக்கப்பட்டிருப்பதால், தேங்கும் மழைநீர் வெளியேறி வழிந்தோடுவதற்குக் வழி இல்லாமல் உள்ளது. இதனால், பள்ளி வளாகம் முழுவதும் ஒரு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நிற்கிறது.

நாளை (4-ஆம் தேதி) புதிய கல்வியாண்டுக்காகப் பள்ளி திறக்கப்படவுள்ள சூழலில், இவ்வாறு தண்ணீர் தேங்கி நிற்பதால் குழந்தைகளுக்குக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இப்பள்ளி வளாகம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதாகும். ஆகவே, ஊராட்சி ஒன்றிய ஆணையர் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, தேங்கியுள்ள மழைநீரை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கு நிரந்தர தீர்வாகப் பள்ளி வளாகம் முழுவதும் கான்கிரீட் கற்கள் பதித்து, முறையான வடிகால் அமைத்து அதனைச் சாலையோர பிரதான மழைநீர் கால்வாயோடு இணைக்க வேண்டும்.

இப்பணியைப் போர்க்கால அடிப்படையில் செய்ய மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கு.பாலமுரளி கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.