குடியிருப்பு உருவானது முதல் தார்ச்சாலை வசதி இல்லை
3 Nov 2026, 12:14 am

குடியிருப்பு உருவானது முதல் தார்ச்சாலை வசதி இல்லை

திருப்பூர், நவ.2-ஊத்துக்குளி அருகே ராஜேஸ்வரி நகர் உருவானது முதல் மண் சாலையை பயன்படுத்தி வருவதாகவும், தார்ச்சாலை அமைத்துத்தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று, ஆட்சியர் சி.முத்துக்குமரன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஊத்துக்குளி, ராஜேஸ்வரி நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊர்,ஊத்துக்குளி தாலுகா அக்ரஹார பெரியபாளையம் ஊராட்சிக்குட்பட்டதாகும். எங்கள் ஊரில் 60க்கும் மேற்ட்ட வீடுகளும், அதில் 250க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகிறோம். நாங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளில்தான் எங்களது வாழ்நாள் சேமிப்பு பணத்தின் மூலம் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். இங்கு மக்கள் வசிக்க தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்துஇன்று வரை தார்ச்சாலை போடாமல்மண் தடம் வழியாகவே இங்கிருந்து ஊத்துக்குளி மெயின் ரோட்டை சென்றடைகிறோம். எனவே சாலை வசதிசெய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.தெற்கு அவிநாசிபாளையம் அலமேடு பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்களது பகுதியில் 110 குடும்பங்களுக்கு நிலமற்ற ஏழைகள் என்பதன் அடிப்படையில், கடந்த2021 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் தெற்கு அவிநாசிபாளையத்தில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும்பொதுமக்கள் குடியேற தேவையான வசதிகள் செய்து கொடுக்கவில்லை. இது தொடர்பாக மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாங்கள் அந்த பகுதியில் குடியேற நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று கோரினர்.

தமிழ்நாடு இ - சேவை மைய உரிமையாளர்கள் சங்கத்தினர் கொடுத்தமனுவில், பல இடங்களில் ஏற்கனவேசெயல்பட்டு வரும் இ - சேவை மையத்திற்கு 50 மீட்டர் தொலைவிற்குள் புதிதாக மற்றொரு இ - சேவை மையம்தொடங்க அனுமதி வழங்கி வருகிறார்கள். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இ - சேவை மையங்களுக்கான நடைமுறை விதிமுறைக

ளின்படி, நகர்ப்புற பகுதிகளில் ஒரு இ - சேவை மையத்திற்கும், மற்றொரு இ - சேவை மையத்திற்கும் இடையே குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று விதி உள்ளது. எனவே இதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

செம்மாண்டகவுண்டன் புதூரை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் கொடுத்த மனுவில், எங்களது பகுதி

யில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு கொடுவாய் அல்லது பொங்கலூர் செல்வதற்குநாச்சிபாளையம் பிரிவு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவேஎங்கள் பகுதியில் பேருந்து வசதி செய்து தர வேண்டும், என்று கோரினர்.

பல்லடம் தாலுகா காளிவேலம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் செண்பகவள்ளி கொடுத்த மனுவில், உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கடும் சிரமத்தில் வாழ்ந்து வருகி

றேன். பல்லடம் பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்த இடம் தர வேண்டும் என இரண்டு ஆண்டுகளாக அரசு அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதேபோன்று, மண் பானை செய்ய மண் கிடைப்பதில்லை எனக்கூறிமண்பாண்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர்.