தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியார் மதுபானக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

2 Oct 2026, 1:12 am
தனியார் மதுபானக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
<p><strong>தனியார் மதுபானக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு</strong></p><p>திருப்பூர், அக்.1 -ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையம் கிராமத்தில், எப்.எல்-2 பார் (FL-2) என்ற தனியார் மதுபான கடை மற்றும்மனமகிழ் மன்றம் திறக்க முயற்சிப்பதைக் கைவிட வலியுறுத்தி வட்டாட்சியரிடம் பொது மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. </p><p>ஊத்துக்குளி கொடியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த க.பழனிசாமி, ஊர் பொதுமக்கள் சார்பில் ஊத்துக்குளி வட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊத்துக்குளி வட்டம், கவுண்டம்பாளையம் கிராமம், மேற்காலத் தோட்டம் பகுதியில் குடியிருப்பு மற்றும் தோட்டத்து சாலைகள் நிறைந்த பகுதியில் எப்.எல்-2 பார் என்ற தனியார்மதுபானக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் துவங்குவதற்கானநடவடிக்கை மற்றும் அதற்கான உரிமம் பெறுவதற்கு சில தனியார் முயற்சித்து வருவதாக தெரியவருகிறது. அதற்கானகட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இப்பகுதி அமைதியான பகுதியாக இருந்து வருகிறது.தனியார் மதுபானக் கடை மற்றும் கிளப் இந்த பகுதியில் உருவாகும் போது, டாஸ்மாக் கடை போல் அதிகமான கூட்டத்துடன், காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். இதனால், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் குழந்தைகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வோர் எனஅனைவருக்கும் மிகப் பெரிய இடையூறாக அமையும். குடித்துவிட்டு சண்டை சச்சரவில் ஈடுபடும் நபர்களால், இந்த பகுதியின் பொது அமைதிக்கு குந்தகம் விளையும். மேலும், இந்த பார் உருவானால் ஊர் பொதுமக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு மிகப்பெரிய இடையூறாக அமையும், ஆகவே இந்த பகுதியில் எந்த விதமான தனியார் மதுபான கடைக்கும், மனமகிழ் மன்றத்திற்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என தெரிவித்தனர். இந்நிகழ்வில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உடனிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.