தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்து அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு

16 May 2026, 1:08 am
போக்குவரத்து அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு

போக்குவரத்து அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு

திருப்பூர், மே 15- திருப்பூரில் அரசுப் போக்குவ ரத்து அதிகாரிகளின் தன்னிச்சைப் போக்கை கண்டித்து சிஐடியு உள் ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தி னர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், இன்னும் போக்குவரத்து துறைக்கு அமைச்சர் நியமிக்கப்படவில்லை.

இந்த சூழலில், உயர் அதிகாரிகள் முக்கிய முடிவெடுக்காமல் தன்னிச் சைப் போக்குடன் செயல்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

குறிப்பாக திருப்பூரில் பேருந்து பணி அமர்த்துவதில் அதி காரிகள் தன்னிச்சைப் போக்குடன் மாறுதல் செய்வது, வார விடுமுறை, ரிலீப் ஷிப்ட்டைப் பறிப்பது, வழித் தடப் பேருந்துகளின் இயக்கத்தை முடக்கி, அந்த பேருந்துகளை சிறப்பு இயக்கத்திற்கு திருப்பி விடுவது, பணியாளர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தொழிலாளர்களின் அவசரத் தேவைக்கு விடுமுறை தர மறுப்பது, போக்குவரத்து கட்டுப் பாட்டாளர் தொழிலாளியின் விடுப்பு விண்ணப்பத்தையே வாங்க மறுப் பது, அவசரத் தேவைக்கு அலைப் பேசியில் விடுப்புக் கூறினால் அதைப் புறக்கணிப்பது என நிர்வாகம் தன் னிச்சைப் போக்குடன் செயல்படுவது தொழிலாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளின் இந்த தன்னிச்சை யானப்போக்கை கண்டித்து, திருப்பூர் காங்கேயம் கிராஸ் அரசுப் பேருந்து பணிமனை அருகில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிஐடியு மண்டலத் தலைவர் பி. செல்லதுரை தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மண்டலப் பொதுச் செயலாளர் கொங்குராஜ், ஏஐடியுசி நிர்வாகி குமரேசன், ஏடிபி சார்பில் சந்திரசேகர், எல்பிஎப் சார் பில் ரமேஷ் பிஎம்எஸ் சார்பில் சிவக் குமார், ஐஎன்டியுசி சார்பில் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.