தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய அரசை கண்டித்து மே 12இல் ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு

10 May 2026, 12:26 am
ஒன்றிய அரசை கண்டித்து மே 12இல் ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு

ஒன்றிய அரசை கண்டித்து மே 12இல் ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு

திருப்பூர், மே 9- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் அடக்கு முறைகளைக் கண்டித்து, வரும் மே 12 ஆம் தேதி திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார் பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் பி.என். சாலையில் உள்ள ஏஐடியுசி பனி யன் சங்க அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் இக்கூட்டத் திற்கு தலைமை தாங்கினார்.

இதில் பனி யன் பேக்டரி லேபர் யூனியன் (AITUC) பொதுச் செயலாளர் என்.சேகர், சிஐடியு பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத், எல்பிஎப் மாவட்ட துணைத் தலைவர் ரங்கசாமி, ஐஎன் டியுசி துணைச்செயலாளர் செந்தில், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் முத்து சாமி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் யுடியுசி மாவட் டச் செயலாளர் சதீஷ்சங்கர் உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர்.

ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைக ளுக்காக போராடி வரும் தொழிலாளர் களுக்கு ஆதரவு தெரிவித்தும், மே 12 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட் டங்கள் நடைபெறுகின்றன.

இதன் ஒரு பகுதி யாக, திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் அன்று காலை திருப்பூர் குமரன் சிலை முன்பாகப் பெருந் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப் பட்டது.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் போக்கை கைவிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுச்சியுடன் பங்கேற்பது எனவும் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.