திருப்பூரில் தீக்கதிருக்கு 1,300 சந்தாக்கள் அளிப்பு!
22 minutes before
<p><strong>திருப்பூரில் தீக்கதிருக்கு 1,300 சந்தாக்கள் அளிப்பு!</strong></p><p>109-ஆவது நவம்பர் புரட்சி தினத்தையொட்டி, திருப்பூரில் ஞாயிறன்று நடைபெற்ற செந்தொண்டர் எழுச்சிப் பேரணி- பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட 1300 சந்தாக்களுக்கான தொகையை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதீப் தத்தாவிடம் ஒப்படைத்தார். திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துகண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எம். கண்ணன், சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>
