அரசு பேருந்து இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு: ஆட்சியரிடம் மனு
15 Jun 2026, 11:55 pm
<p><strong>அரசு பேருந்து இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு: ஆட்சியரிடம் மனு</strong></p><p>திருப்பூர், ஜூன் 15 - திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட் டம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட் சிக்குட்பட்ட அறிவொளி நகர் பகுதி யைச் சேர்ந்த பெற்றோர்கள், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக் காக பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பெற்றோர் கள் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அம்மனுவில், அறி வொளி நகரிலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளி 3 கிலோமீட்டருக்கும் மேல் தொலைவில் அமைந்துள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்லவும், திரும்பி வரவும் கடும் சிரமம் அனுபவித்து வருகிறார் கள். பேருந்து வசதி இல்லாத காரணத் தால், மாணவர்கள் தனியார் ஆட்டோக் களில் பயணம் செய்து வருவதுடன், கூலி வேலை செய்யும் பெற்றோர்கள் மாதந்தோறும் கூடுதல் செலவுகளை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோக்கள் பழுதடை யும் நாட்களில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழலும் நிலவுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறி வொளி நகர் வழியாக தார்ச்சாலை வசதியும், பல்வேறு பேருந்துகள் இயக் கப்படும் சூழலும் இருந்தபோதிலும், பள்ளி மாணவர்களுக்கென நேரடி பேருந்து வசதி இல்லாதது கல்வியை பாதிப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதே பகுதியில் இருந்து மாணவி கள் சைக்கிளில் சென்றாலும் அந்த சாலையில் மதுபான கடை இருப்பதால் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்ற னர். எனவே, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, அறி வொளி நகர் பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரடி பேருந்து சேவையை உடனடியாக இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மதுபான கடையை அகற்ற வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
