அரசு பேருந்து இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
16 Jun 2026, 12:01 am

அரசு பேருந்து இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு

திருப்பூர், ஜூன் 15 - அரசு மேல்நிலை பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த பெற்றோர் கள், அரசு மேல்நிலைப் பள்ளி மாண வர்களுக்காக பேருந்து வசதி ஏற்ப டுத்தித் தரக் கோரி மனு அளித்துள் ளனர்.

அறிவொளி நகரிலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளி 3 கிலோமீட்ட ருக்கும் மேல் தொலைவில் அமைந் துள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்லவும், திரும்பி வரவும் கடும் சிரமம் அனுபவித்து வருகிறார் கள். பேருந்து வசதி இல்லாத கார ணத்தால், மாணவர்கள் தனியார் ஆட்டோக்களில் பயணம் செய்து வருவதுடன், கூலி வேலை செய் யும் பெற்றோர்கள் மாதந்தோறும் கூடுதல் செலவுகளை ஏற்க வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆட்டோக்கள் பழு தடையும் நாட்களில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழ லும் நிலவுவதாக மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

அறிவொளி நகர் வழியாக தார்ச் சாலை வசதியும், பல்வேறு பேருந் துகள் இயக்கப்படும் சூழல் இருந்தபோதிலும், பள்ளி மாண வர்களுக்கென நேரடி பேருந்து வசதி இல்லாதது கல்வியை பாதிப் பதாக பெற்றோர்கள் கவலை தெரி வித்துள்ளனர். இதே பகுதியில் இருந்து மாண விகள் சைக்கிளில் சென்றாலும் அந்த சாலையில் மதுபான கடை இருப்பதால் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, அறி வொளி நகர் பகுதியில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரடி பேருந்து சேவையை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மதுபான கடை அகற்ற வேண் டும் என இந்த பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர்.

உயிரி எரிவாயு மையத்திற்கு எதிர்ப்பு

பல்லடம் அடுத்த மாணிக் காபுரம் பகுதியில் 8 ஏக்கர் பரப் பளவில் குப்பைகளிலிருந்து உயிரி எரிவாயு (பயோ சி.என்.ஜி) தயா ரிக்கும் மையம் அமைக்க திருப் பூர் மாநகராட்சி முயன்று வருவ தாகவும், இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் காரணமாக கடுமை யான துர்நாற்றம் ஏற்படுவதுடன் நிலத்தடி நீரின் தன்மையும் பாதிக் கப்படும் அபாயம் உள்ளது. பொது மக்கள் அதிக அளவில் வசிக் கும் குடியிருப்பு பகுதிக்கு அரு கில் இந்த உயிரி எரிவாயு உற் பத்தி மையம் அமைக்கும் முயற் சியை கைவிட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பட்டா இடத்தை அளந்து தர கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் காங்கே யம் அருகே மூர்த்தி ரெட்டிபாளை யம் சகாயபுரம் நெய்க்காரம்பாளை யம் பெரியார் நகர் சத்யா நகர், சாம்பவலசு கோட்டை மாநகர் கள்ளிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 330 குடும் பத்தினருக்கு ஆதிதிராவிட நலத் துறை மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீரணம்பாளையம் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி ஓராண்டு நிறைவடைந்தும் இதுவரையிலும் தங்களுக்கான நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் இருப்பதால் பட்டா பெற்ற பின்னரும் தங்கள் இடத் தில் குடியிருக்க முடியாமல் வாடகை வீடுகளில் வசித்து வரு வதாகவும் தங்களுக்கான நிலத்தை அளவீடு செய்து உடனடியாக வழங்க வேண்டும் என பட்டா பெற்ற பயனாளிகள் மாவட்ட ஆட்சியரி டம் புகார் மனு அளித்தனர்.

வீடுகளை மீட்டுக் கொடுக்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சின்னபுதூர் கிராமத்தில் சத்திரம் ஆண்டிக்காடு பகுதியில் கிட்டுச்சாமி என்பவரிடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 ஆயிரம் ரூபாய் கொடுத்து 3 சென்ட் நிலத்தை பெற்று பயன்படுத்தி வந்தனர். பத்திரப்பதிவு மற்றும் பட்டா வழங்குவதாக சொல்லி இறுதிவரை பெயர் மாற்றம் செய்து தரவில்லை. இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மகன் சக்திவேல் தனது பெயரில் உள்ள நிலத்தில் அத்துமீறி குடியி ருந்து வருவதாக, இவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

மேலும் வீடு களை இடிக்க முயல்வதாகவும், தங்களது வீடுகளை மீட்டுக் கொடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.