கால்பந்து போட்டியில் திருப்பூர் மாணவர்கள் சாதனை
5 Feb 2026, 3:40 pm
<p><strong>கால்பந்து போட்டியில் திருப்பூர் மாணவர்கள் சாதனை</strong></p>
<p>திருப்பூர், பிப். 5 - தேசிய, சர்வதேச அளவில் நடைபெற்ற எஸ்.பி.கே.எப். கால்பந்து போட்டியில் பங்கேற்று திருப்பூர் மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளடக்கிய வீரபாண்டி அவெஞ்சர்ஸ் அகா டமியை சேர்ந்த பயிற்சியாளர்கள் அருண் பிரகாஷ், மோகன், அகிலா, தெட்சணாமூர்த்தி, ரீகன் ஆகி யோர் தலைமையில் தேசிய போட்டியில் பங்கேற்றனர். கடந்த டிசம்பர் மாதம் 26--28 தேதிகளில் டெல்லி நேரு ஸ்டே டியத்தில் நடைபெற்ற 13 வது எஸ்.பி.கே.எப். தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் இவர்கள் கலந்து கொண்டனர். முதலிடத்தில் ஒரு அணியும், இரண்டாமி டத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்று திருப்பூர் திரும்பி னர். இதனைத் தொடந்து இந்த மாதம் நேபாள நாட்டின் பொக்காராவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2ந் தேதி வரை எஸ்.பி.கே.எப்., சர்வதேசப் போட்டிகள்- 2026 நடை பெற்றன. இப்போட்டியில் பங்கெடுத்த வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளின் அணிகளுடன் இந்திய அணி சார்பாக இவர்கள் பங்கேற்றனர். 19 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர். 17 வயதுக்கு கீழ் உள்ள அணியில் முதலிடம் பெற்றனர். 14 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற 22 வீரர்கள் புதனன்று திருப்பூர் திரும்பினர். பெற் றோர்கள் மற்றும் நண்பர்கள் திருப்பூர் ரயில் நிலை யத்தில் திரளாக கலந்து கொண்டு கால்பந்து வீரர்களை வாழ்த்தி வரவேற்றனர்.</p>
