தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

9 Jul 2026, 9:54 pm
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
<p><strong>சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தல்</strong></p><p>திருப்பூர், ஜூலை 9- சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடக் கோரி புதனன்று திருப்பூர் மாநக ராட்சி (பொறுப்பு) மேயர் ஆர்.பால சுப்பிரமணியத்திடம், சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் தலைமை யில் வியாபாரிகள் மனு அளித்த னர். அந்த மனுவில் கூறியிருப்பதா வது: திருப்பூரில் போக்குவரத்துக் கும் பொதுமக்களுக்கும் இடை யூறு இல்லாமல், தள்ளுவண்டிகள் மற்றும் சாலையோரங்களில் காய் கறி, பழங்கள், துணிகள் உள்ளிட்ட வற்றை விற்று ஏழைத் தொழிலா ளர்கள் வாழ்வாதாரம் நடத்தி வரு கின்றனர். ஆனால், தற்போது மாநக ராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற் றம் என்ற பெயரில் காங்கயம் சாலை, மங்கலம் சாலைகளில் வியாபாரிகளை அகற்றியுள்ளது டன், பல்லடம் சாலையிலும் வியா பாரம் செய்யக் கூடாது எனத் தடுத்து வருகிறது. மேலும், அவர்களின் வாழ்வாதாரப் பொருட்களை பறி முதல் செய்து குப்பை வண்டியில் போடுவதால் பெரும் இழப்பு ஏற் படுகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இயற்றியுள்ள ‘சாலையோர வியா பாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு படுத்துதல் சட்டம் 2014’-ஐ திருப் பூர் மாநகராட்சி உடனடியாக அமல் படுத்த வேண்டும். வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்தி, அனைத்து பகுதி வியாபாரிகளை யும் முறையாக கணக்கெடுத்து பயோமெட்ரிக் முறையில் அடை யாள அட்டையும், விற்பனை உரிம மும் வழங்க வேண்டும். மதுரை, ஈரோடு மாநகராட்சிகளை போல திருப்பூரிலும் சாலையோர வியா பாரிகளுக்கு தள்ளுவண்டிகளை வழங்க வேண்டும். சட்ட விதிகளை மீறி வியாபாரிகளின் பொருட்களை பறிமுதல் செய்வதை கைவிட வேண் டும் என சிஐடியு சார்பில் வலியு றுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.