முந்தய பக்கம்

திருப்பூர் தெற்குத் தொகுதி பணிமனை திறப்பு

4 Apr 2026, 4:02 pm
திருப்பூர் தெற்குத் தொகுதி பணிமனை திறப்பு
<p><strong>திருப்பூர் தெற்குத் தொகுதி பணிமனை திறப்பு</strong></p> <p>திருப்பூர், ஏப்.4&ndash; மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பூர் தெற்குத் தொகுதி தேர்தல் பணிமனை வெள்ளியன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. திருப்பூர் தெற்குத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் ந.தினேஷ்குமார் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி, தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாகத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் வெள்ளியன்று மாலை திருப்பூர் கஜலட்சுமி தியேட்டர் வளாகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், திருப்பூர் தொகுதி எம்.பி., கே.சுப்பராயன் கலந்து கொண்டு பணிமனையைத் திறந்து வைத்தார். திமுக தெற்கு மாநகரச் செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜன், சி.கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் கோபால்சாமி மற்றும் விசிக, தேமுதிக, முஸ்லிம் லீக், கொமதேக உள்ளிட்ட, தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் உரையாற்றினர். தமிழ்நாட்டு நலனைப் பாதுகாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் என்று தலைவர்கள் கூறினர். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram