திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்: சுப்பராயன் எம்.பி., ஆய்வு
27 Jun 2026, 12:48 am
<p><strong>திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்: சுப்பராயன் எம்.பி., ஆய்வு</strong></p><p>திருப்பூர், ஜூன் 26 - திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் வியாழ னன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தினசரி மார்க்கெட் பகுதிக்குச் சென்ற அவர், வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப் போது, காலை நேரத்தில் காய்கறி வாகனங்களை நிறுத்தப் போதிய இடவசதி மற்றும் கழிவறை வசதிகள் இல்லை என வியாபாரிகள் புகாரளித் தனர். தொடர்ந்து, பழைய பேருந்து நிலையம் எதிரே கட்டி முடிக்கப் பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ள கடைகளைப் பார்வையிட்டார். அங்கு, கடைகளுக்கு கூடுதல் முன் பணமும், வாடகையும் கேட்பதால் தங்களால் எடுத்து நடத்த முடிய வில்லை என்றும், நியாயமான வாடகை நிர்ணயிக்க வேண்டும் என் றும் பழைய வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். பூ மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தபோது, ஒப்பந்ததாரர்கள் தமிழ்நாட்டின் வேறெங்கும் இல்லாத அளவிற்கு மிகக் கூடுதல் வாடகை கேட்டு நிர்பந்திப்பதாக வியாபாரிகள் குமுறினர். தொடர்ந்து, டவுன்ஹால் பகுதியில் கட்டப்பட்டுள்ள மாநாட்டு அரங்கம், பல அடுக்கு வாகன நிறுத் தத்தை பார்வையிட்ட எம்.பி., அவற்றை உடனடியாக பயன் பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பெறப் பட்ட கோரிக்கைகள் குறித்து, வரும் வாரத்தில் சென்னை சென்று முதல மைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து பேசுவதாக கே.சுப்பராயன் எம்.பி. உறுதியளித்தார். இந்த ஆய் வில் பொறுப்பு மேயர் ஆர்.பாலசுப் பிரமணியம், மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித், மாமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங் கேற்றனர்.</p>
