தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீராத சாக்கடை பிரச்சனையால் விவசாய விளைநிலம் பாழானது

17 Jul 2026, 11:30 pm
தீராத சாக்கடை பிரச்சனையால் விவசாய விளைநிலம் பாழானது
<p><strong>தீராத சாக்கடை பிரச்சனையால் விவசாய விளைநிலம் பாழானது</strong></p><p>திருப்பூர், ஜூலை 17 - திருப்பூர் மாநகராட்சி கவுண்டநாயக்கன் பாளையம் பகுதியில் கடந்த 20 வருடங்களாக சாக்கடை நீர் விவசாய நிலத்தில் பாய்வதை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்து தரும் படி மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுண்ட நாயக் கன்பாளையம் கிளை சார்பில் சி. சுப்பிரமணியம் மற்றும் அப்பகுதி மக்கள் கையெழுத்திட்டு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் கவுண்டனநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வார்டு எண் 32-க்கும், வார்டு எண் 6-க்கும் இடையே கோல்டன் நகர் பழைய கே.எஸ் தியேட்டர் ரோடு வழியாக செல்லும் சாக்கடை கால்வாய் உடைந்துள்ளது. இந் நிலையில் 32-வது வார்டில் இருந்து 6-வது வார்டுக்குள் அசுத்தமான சாக்கடை நீர் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த 20 வருடங்களுக்கும் மேல் பாய்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் விவசாயம் பாதித்து பயிர்கள் அழிந்து விவ சாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். விவசாய நிலத்தில் உப்பு, ரசாயனம் கலந்த நீர் செல்வதால் சுமார் 80 ஏக்கர் விலை நிலம் பயனற்று போனது. இத்துடன் கொசு, துர்நாற்றம் மற்றும் நோய்கள் பரவி இப்பகுதி மக்க ளுக்கு உடல்நலக்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக கவுண்டநாயக் கன்பாளைத்தில் இருந்து கோல்டன் நகர் செல்லும் சாலை பாதிப்படைந்ததால் இப்பகுதி மக்கள் சுமார் 5 கி.மீ தூரம் சுற்றி செல்லும் நிலை கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கி றது. இது தொடர்பாக ஏற்கனவே வார்டு உறுப்பினர் மற் றும் சுகாதார ஆய்வாளரிடம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, மாநகராட்சி ஆணையர் உடனடியாக சாக்கடை கால் வாயை சரி செய்து, சாக்கடை நீர் விவசாய நிலத்திற்கு செல்லாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.