தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் திருப்பூர் பள்ளி மாணவிகளின் ஆய்வு தேர்வு

9 Dec 2025, 4:25 pm
மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் திருப்பூர் பள்ளி மாணவிகளின் ஆய்வு தேர்வு
<p><strong>மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் திருப்பூர் பள்ளி மாணவிகளின் ஆய்வு தேர்வு</strong></p> <p>திருப்பூர், டிச.9- திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட் டில் சிறந்த ஆய்வாக திருப்பூர் கொங்கு நகர் பகுதியில் உள்ள அமுதா பள்ளி மாணவிகளின் ஆய்வு தேர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூ ரியில் டிச.6, 7 ஆகிய தேதிகளில் 34 &nbsp;ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. &ldquo;நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை&rdquo; எனும் தலைப்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மண்டல &nbsp;அளவில் தேர்வான மாணவர்கள் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் திருப்பூர் மாவட்டம் சார்பில் 5 ஆய்வுகளை சமர்ப்பிக்க 10 &nbsp;மாணவர்கள் கலந்து கொண்டனர். &nbsp; இதில் அமுதா பள்ளியில் பயிலும் &nbsp;மாணவிகள் தன்சிகா மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் அவர்க ளின் பள்ளி சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களிடம் கருத்து கேட்பு &nbsp;மூலம் &ldquo;பொதுமக்களின் அன்றாட &nbsp;பயன்பாட்டின் தண்ணீர் தணிக்கை, &nbsp;அதில் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார ரீதியான சவால்கள்&rdquo; &nbsp;எனும் தலைப்பில் மேற்கொண்ட கள ஆய்வு மிகச் சிறந்த 32 ஆய்வு களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. குறிப்பாக அவர்களின் ஆய்வு நகரப் பகுதிகளில் குடிநீ ருக்கு பணம் செலவு செய்து வாங் கும் மினரல் வாட்டர் கேன் தொடங்கி, மற்ற தினசரி பயன்பாட் டிற்கு லாரி தண்ணீர் வாங்குவது போன்ற வாடிக்கையான நிகழ்வுக ளினால் ஏற்படும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை நுட்பமான முறையில் ஆய்வு படிவங்களில் சேகரித்துள்ளனர். இந்த ஆய் வினை மேற்கொண்ட பள்ளி மாண வர்களுக்கும் வழிகாட்டிய ஆசிரி யைக்கும் தமிழ்நாடு அறிவியல் &nbsp;இயக்கம் திருப்பூர் மாவட்டக்குழு &nbsp;வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.