தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் உழவர் சந்தை முதல் பேருந்து நிலையம் வரை சாலையோரக் கடைகள் அகற்றம்: சிஐடியு எதிர்ப்பு

5 Jul 2026, 1:27 am
திருப்பூர் உழவர் சந்தை முதல் பேருந்து நிலையம் வரை சாலையோரக் கடைகள் அகற்றம்: சிஐடியு எதிர்ப்பு

திருப்பூர் உழவர் சந்தை முதல் பேருந்து நிலையம் வரை சாலையோரக் கடைகள் அகற்றம்: சிஐடியு எதிர்ப்பு

திருப்பூர், ஜூலை 4 - திருப்பூர் - பல்லடம் சாலையில், தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தை முன்பிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் பேருந்து நிலையம் வரை இருந்த சாலையோரக் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் சனியன்று அதிகாலை அகற்றப்பட்டன.

பல்லடம் சாலையில் உள்ள பிர தான வணிக நிறுவனங்களின் முன் பாக தரை வாடகை கொடுத்து, காலை நேரத்தில் வியாபாரம் செய்வ தால் போக்குவரத்து நெருக்கடி ஏற் படுவதாகக் கூறி, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இந்த அகற்று தல் நடவடிக்கையை மேற்கொண் டது. விதிமுறைப்படி உழவர் சந்தை யிலிருந்து 100 மீட்டர் தொலைவில் வியாபாரம் செய்து வந்த ஏழை வியா பாரிகளின் கடைகளும் அகற்றப்பட்ட தற்கு, சிஐடியு சாலையோர வியா பாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது.

தகவலறிந்து வந்த சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பாலன் மற் றும் வியாபாரிகள், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். ஆட்சியர் உத்தர வுப்படி கடைகளை அகற்றுவதாக வட்டாட்சியர் கூறியதை அடுத்து, வியாபாரிகள் சாலை மறியலில் ஈடு பட முயன்றனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், 100 மீட்டர் தள்ளி கடைகளை அமைத்துக் கொள் ளுங்கள் என அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இருப்பினும், சில அதி காரிகள் மாநகராட்சி குப்பை வண்டி களில் வியாபாரப் பொருட்களை அள்ளிப் போட்டதாகக் குற்றம் சாட் டப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் என்று கூறிக் கொண்டு நகரில் பல்வேறு பிரச் சனைகளில் அத்துமீறி செயல்படும் சிலர் அனைத்துக் கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என வற் புறுத்தினர். போலி சமூக ஆர்வலர் உள்ளிட்ட சிலரது தூண்டுதலில் செயல்பட்ட அதிகாரிகள், எல்லா கடைகளையும் அப்புறப்படுத்துவ தற்கு ஏற்பாடு செய்தனர். இதற்கு சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திலும் இது குறித்து மனு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்க நிர்வாகி கூறுகையில், முன்னாள் சார் ஆட்சி யர் மற்றும் வட்டாட்சியர் அனுமதி யோடு, போக்குவரத்திற்கு இடை யூறு இன்றி கடந்த 2 ஆண்டு களாகவே இங்கு பழ வியாபாரம் தடையின்றி நடந்து வந்தது. தற் போது உள்நோக்கத்தோடு கடைகள் அகற்றப்பட்டுள்ளன. சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். அவர்க ளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அடை யாள அட்டை கொடுத்ததில் குளறு படிகள் அதிகமாக இருக்கிறது. வியா பாரம் செய்யும் இடத்தில் கொடுக்கா மல் வீட்டு முகவரி போட்டு சாலை யோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை கொடுப்பதை சிஐடியு வன் மையாக கண்டித்து, ஏற்கெனவே மேயரிடம் மனு கொடுக்கப்பட்டுள் ளது. அதை சரி செய்வதாக சொன் னார்கள். ஆனால் காலம் கடத்தி வரு கின்றனர்.

சாலையோர வியாபாரிகளுக்கு மதுரை, ஈரோடு மற்றும் திருப்பூர் பூண்டி நகராட்சிகளில் தள்ளுவண்டி கள் வழங்கப்பட்டிருக்கிறது.அது போல திருப்பூர் மாநகராட்சி நிர்வா கம் தள்ளுவண்டி வழங்க வேண்டும். வென்டிங் கமிட்டி அமைத்து அவர் கள்தான் எந்த இடத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக் கும் அதிகாரம் இருக்கிறது. ஆகவே தமிழ்நாடு அரசாங்கம் இதில் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.