திருப்பூரில் கோர விபத்து காவலர் உட்பட 6 பேர் பலி
13 May 2026, 8:58 pm

திருப்பூரில் கோர விபத்து காவலர் உட்பட 6 பேர் பலி

திருப்பூர், மே 13 - திருப்பூர் மாவட்டம், வெள்ள கோவில் அருகே புதனன்று அதி காலை நேரிட்ட சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் இருந்து சவுக்கு கட்டை பாரம் ஏற்றிக் கொண்டு, சரக்கு லாரி வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. தி

ருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள கோவில், சேனாபதிபாளையம் கிரா மம் குறுக்கத்தி சோதனைச் சாவடி அருகில் அதிகாலை 3.30 மணியளவில் இந்த லாரி வந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த வேகத்தடுப்பு மீது இடித்து விட்டது.

எனவே லாரி யை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியின் ஓட்டுநர் செந்தில், சோதனைச் சாவடி யில் பணியில் இருந்த காவலர் ரவிச் சந்திரன் உதவியுடன் வேகத்தடுப்பு அரணை சரி செய்துவிட்டு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில் கோவை நோக்கி வந்த காரின் ஓட்டுநர் அங்கு நின்று கொண்டிருந்த காவலர் ரவிச்சந்திரன், லாரி ஓட்டுநர் செந்தில் ஆகியோர் மீதி மோதி, அரு கில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதியது.

இதில் காவலர் ரவிச்சந்திரன், லாரி ஓட்டுநர் செந்தில் மற்றும் காரில் மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வந்த பாலாஜி (34), அவரது தந்தை நரசிம்மன் (65), தாயார்சாந்தலட்சுமி (60) கார் ஓட்டுநர் சீவலப்பேரியைச் சேர்ந்த ராம் (22) ஆகிய நால்வர் என 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழ ந்தனர்.

காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் விபத்து குறித்து தகவல் அறிந்து வெள்ளகோவில் போலீசார் அங்கு சென்று விபத்தில் உயிரிழந்தோர் சட லங்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்த தாராபுரத்தைச் சேர்ந்த வெள்ளகோவில் காவல் நிலைய காவ லர் ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு முத லமைச்சர் விஜய் ரூ.30 லட்சம் நிதியு தவி அறிவித்தார் மேலும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே விபத்து நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத் தினரை திருப்பூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.