தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆர்.எம்.எஸ் அலுவலகம் தொடர்ந்து செயல்படும் என உறுதியளிப்பு

19 Jun 2026, 2:27 am
ஆர்.எம்.எஸ் அலுவலகம் தொடர்ந்து செயல்படும் என உறுதியளிப்பு

ஆர்.எம்.எஸ் அலுவலகம் தொடர்ந்து செயல்படும் என உறுதியளிப்பு

திருப்பூர், ஜூன் 18 - திருப்பூர் ரயில் நிலையம் வளா கத்தில் செயல்பட்டு வரும் ஆர்.எம்.எஸ் அலுவலகம் மூடப்படும் என்ற தகவலை அடுத்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்.எம்.எஸ். ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவ தாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஆர் எம் எஸ் அலுவலகம் தொடர்ந்து செயல்ப டும், மூடப் போவதில்லை என்று உயர் அதிகாரிகள் உறுதி அளித்த னர். இதைத் தொடர்ந்து ஆர்.எம்.எஸ் ஊழியர்கள் சங்கம் புதன் கிழமை அறிவித்திருந்த உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட் டது. பின்னலாடை ஏற்றுமதி தொழில் நகரமான திருப்பூரில் உள்ள ஆர்.எம்.எஸ் அலுவலகம் சிறப்பான முறையில் முக்கிய சேவைகளை அளித்து வந்தது. இந்நிலையில் இந்த அலுவல கத்தை மூடப்போவதாக தகவல் வெளிவந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்பூர் எம்பி கே.சுப்பராயன் ஒன்றிய அமைச்சருக்கு, திருப்பூர் ஆர்எம்எஸ் அலுவலகத்தை மூடக் கூடாது என கடிதம் எழுதினார். திருப்பூர் தொழில்துறையினர், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரை பாதிக்கக் கூடிய முடிவை கைவிட வேண்டும்.

ஆர்.எம்.எஸ் அலுவலகத்தை தொடர்ந்து இயக்க வேண்டும். மூடக்கூடாது என வலியுறுத்தி ஆர்.எம்.எஸ் ஊழியர் சங்கத்தினர் ஜூன் 17 புதன்கிழமை முதல் கால வரையற்ற உண்ணாவிரத போராட் டம் நடத்தப் போவதாகவும் அறி வித்திருந்தனர். இதற்கிடையே உயர் அதிகாரிகள் திருப்பூர் ஆர்.எம்.எஸ் அலுவலகத்தை மூடப் போவதில்லை, தொடர்ந்து செயல் படும் என்று ஊழியர் தரப்பிடம் உறு தியளித்தனர்.

இதை ஏற்று ஊழியர் சங்கத்தி னர், ஏற்கனவே அறிவித்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தாமல் கைவிட்டனர். திருப்பூர் மக்கள் பிரதிநிதிகள், தொழில் வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பலத்த எதிர்ப்பின் காரண மாகவே ஆர்.எம்.எஸ் அலுவலகம் மூடும் முடிவு கைவிடப்பட்டுள்ளது.

தொழில், வர்த்தக, தொழிலாளர் நலனை முன்வைத்து செயல்படக் கூடிய இந்த ஆர்.எம்.எஸ் அலுவல கத்தை மூடினால் இங்கு பணியாற் றும் ஊழியர் நலனும் பாதிக்கப்ப டும். எனவே இந்த அலுவலகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை யில் குரல் கொடுத்த அனைத்து தரப் பினருக்கும் ஊழியர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.