வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த திருப்பூர் ரிதன்யாவின் பெற்றோர் முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள்
31 May 2026, 9:38 pm

வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த திருப்பூர் ரிதன்யாவின் பெற்றோர் முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள்

திருப்பூர், மே 31 - திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வரதட்சணைக் கொடுமையால் திருமண மான 78 நாட்களிலேயே மரணமடைந்த ரிதன்யாவின் பெற்றோர், தங்கள் மகளின் மர ணத்திற்கு முறையான நீதி கேட்டு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்-க்கு உருக்க மான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

தங்களின் மகள் இறந்து 11 மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை தங்களுக்கு எவ்வித நீதியும் கிடைக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் வேளையில், தங்களைப் போன்ற பெற்றோர் பிள்ளையைப் பறி கொடுத்துவிட்டு வீதிகளில் தவித்து வருவ தாகவும் ரிதன்யாவின் குடும்பத்தினர் அவி னாசி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு கால்நடைத்துறை அமைச்சருமான எஸ்.கமலியை நேரில் சந்தித்து மனு கொடுத்து உள்ளனர்.

இந்த வழக்கில் முறையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தக் கோரியுள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளி வந்தனர். முதலமைச்சரின் நேரடித் தலை யீட்டின் மூலம் மட்டுமே தங்கள் மகளின் மரணத்திற்குச் சரியான நீதி கிடைக்கும் என்று ரிதன்யா குடும்பத்தினர் முழுமை யாக நம்புகின்றனர். இ

ந்த வழக்கு குறித்து அதிகாரிகள் இதுவரை தங்களைச் சரியாக விசாரிக்கவே இல்லை என்று ரிதன்யாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய ரிதன்யாவின் தாயார், “நாங்கள் எல்லா பக்கமும் அலைந்து ஓடிவிட்டோம், ஆனால் எங்களை யாரும் முறையாக விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் சரியான மற்றும் கடுமையான நட வடிக்கை எடுக்காத காரணத்தினால், மிகப் பெரிய இழப்பையும் தீராத மன வருத்தத் தையும் நாங்கள் இன்று வரை தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

தங்கள் மகள் ரிதன்யா உயிருடன் இருந்தபோது வைத்திருந்த பணம், நகைகள் மற்றும் வரதட்சணையாகக் கொடுத்து அனுப்பப் பட்ட கார் உள்ளிட்ட எந்தவொரு பொருளை யும் இதுவரை காவல்துறை மீட்டுத் தர வில்லை.

என் பிள்ளையின் பொருட்கள் எதுவும் இன்னும் எங்களிடம் திரும்பி வரவில்லை.

பிள்ளையை இழந்துவிட்டு நாங்கள் இங்கே பைத்தியக்காரனைப் போலப் பரி தவிக்கிறோம். ஆனால், என் மகளின் மரணத் திற்குக் காரணமானவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளியில் மிகவும் சுந்திர மாகச் சுற்றித் திரிகிறார்கள்” என்றார் கண்ணீருடன்.