பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: மக்கள் போராட்டம்!
18 Jul 2026, 10:16 pm
<p><strong>பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: மக்கள் போராட்டம்!</strong></p><p>திருப்பூர், ஜூலை 18- சுகாதார நடைமுறைகளை முறை யாக பின்பற்றாமல், பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாறைக்குழிக்கு செல்லும் பகுதியை மக்கள் பூட்டுப் போட்டு பூட்டி னர். குப்பை கொட்டும் இடத்தில் சுகாதா ரத்ததை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர். திருப்பூர் மாநகராட்சி, 20 ஆவது வார்டுக்குட்பட்ட திருமலை நகர் அண்ணா வீதியில் உள்ள பழைய பாறைக்குழி யில் மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் குப்பைகளை கொட்டி வருவதால் கடு மையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள் ளது. சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கட்சி வடக்கு மாந கர நிர்வாகிகள் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதி பொது மக்கள் பாறைக்குழிக்குச் செல்லும் பிரதான கேட்டை பூட்டுப் போட்டு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவ லறிந்து அங்கு வந்த சுகாதார அலுவ லர் கோகுலிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். அதிகாரிகள் தரப்பில், “குப்பை களை மேற்கு ஓரமாக தள்ளுவது, தின மும் கிருமிநாசினி மருந்து தெளிப்பது, குப்பைகள் காற்றில் பறக்காமல் தடுக்க வலை கட்டுவது, விரைவில் அனைத்து குப்பைகளையும் முழுமையாக இட மாற்றம் செய்வது” என உறுதி அளிக் கப்பட்டது. இதையடுத்து, பொதுமக் கள் தற்காலிகமாக கேட்டை திறந்து விட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப் பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பா. சௌந்தர்ராசன், மாநகரக்குழு உறுப்பி னர் எஸ்.ராஜேந்திரன், பொன்.பால குமாரன், கிளைச் செயலாளர்கள் கம்யூ னிஸ்ட் மணி, வைர மூர்த்தி மற்றும் ராம்கி ஆகியோர் உடனிருந்தனர்.</p>
