திருப்பூர் வாசிக்கிறது நிகழ்ச்சி
22 Jan 2026, 2:57 pm
<p><strong>திருப்பூர் வாசிக்கிறது நிகழ்ச்சி</strong></p>
<p>திருப்பூர், ஜன.22- 22 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு “திருப்பூர் வாசிக்கிறது” என்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத் தப்பட்டது. இந்நிகழ்வு மூலம் தனி நேரம் ஒதுக்கி திருப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள் தங்கள் பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகத்தை வாசித்து அதில் உள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் புத்தகத் திருவிழா பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மாண வர்களுக்கு எதிர்வரும் ஜனவரி 24 தொடங்கும் திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெறுவதை தெரிவித்து மாணவர் களை உற்சாகப்படுத்தினர்.</p>
