முந்தய பக்கம்

திருப்பூர் வாசிக்கிறது இயக்கம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

22 Dec 2025, 4:02 am
திருப்பூர் வாசிக்கிறது இயக்கம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்
<p>திருப்பூர், டிச.22 &ndash; திருப்பூர் வாசிக்கிறது (திருப்பூர் ரீட்ஸ்) இயக் கத்தை ஞாயிறன்று மாவட்ட &nbsp;ஆட்சியர் மனிஷ் நாரணவரே &nbsp;தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் இந்த &nbsp;வாசிப்பு இயக்கம் தொடங்கி &nbsp;வைக்கப்பட்டது. இந்த வாசிப்பு இயக்கத்தின் நோக்கம் அமைதியை விரும்புவோர் மற்றும் திருப்பூ ரில் வாசிப்புப் பழக்கத்தைப் பொதுவெளி யில் ஊக்குவிக்கும் நோக்குடன், @tiruppur. reads எனும் அமைதியான வாசிப்புச் சமூகம் &nbsp;தனது முதல் நிகழ்வைத் தொடங்குகிறது. &nbsp;திருப்பூரில் பொது இடங்களில் வாசிப் பதை ஒரு வழக்கமான நிகழ்வாக மாற்றுவதே &nbsp;இதன் நோக்கம். &nbsp;இது ஒரு புத்தக விவாதக் குழு அல்ல. மாறாக, அனைவரும் ஒன்று கூடி &nbsp;அவரவர் புத்தகங்களை அமைதியாக வாசிக் கும் ஒரு தளம் ஆகும். &nbsp;இந்த வாசிப்பு இயக்கத்தில் நுழைவுக் கட்டணம் கிடையாது, முன்பதிவு தேவை யில்லை. ஆர்வமுள்ளவர்கள் ஒரு விரிப்பு &nbsp;மற்றும் தங்களுக்குப் பிடித்த புத்தகத்துடன் வந்தால் போதும். குறிப்பிட்ட நேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், எப் போது வேண்டுமானாலும் படித்து விட்டு &nbsp;செல்லலாம். &nbsp;அனைத்து ஞாயிற்று கிழமைக ளிலும் காலை 9 மணி முதல் 11 மணி வரை &nbsp;இந்த வாசிப்பு இயக்கம் நடைபெறும். எனவே, பொது மக்கள், தேர்வு எழுதுப வர்கள், மாணவ, மாணவியர்கள் திருப்பூர் ரீட்ஸ் புத்தகம் வாசிப்பு இயக்கத்தில் பங்கு &nbsp;பெற்று பயன்பெறலாம். இது புதிய தலைமு றையினரிடம் வாசிப்பு ஆர்வத்தை தூண்ட வும், தொடர்ந்து, புத்தகத்தில் கவனம் செலுத்தி படிக்கவும் நடத்தப்படும் ஒரு பொது &nbsp;வாசிப்பு இயக்கமாகும். இதில் கலந்து கொண்டு திருப்பூர் மக்கள் பயன்பெறுமாறு ஆட்சியர் மனிஷ் நாரணவரே கேட்டுக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram