உயர் அதிகாரிகள் உறுதியளிப்பு நியாயவிலை கடை ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு
26 Jun 2026, 1:45 am
<p><strong>உயர் அதிகாரிகள் உறுதியளிப்பு நியாயவிலை கடை ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு</strong></p><p>திருப்பூர், ஜூன் 25- தாயுமானவர் திட்ட குறைபாடுகள் மற் றும் ‘இ.கே.ஒய்.சி’ செய்வதில் உள்ள நடை முறை சிக்கல்களை தீர்க்கக் கோரி, திருப் பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கத்தி னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து, மாவட்ட வழங்கல் அலுவ லரின் நேர்முக உதவியாளர் மற்றும் நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாள ரைச் சந்தித்து, நியாயவிலைக் கடைக ளுக்கு தரமான பொருட்களையும், சரியான எடையில் சாக்குகளில் அனுப்பவும் வலியு றுத்தினர். இக்கோரிக்கைகளை ஆராய்ந்து குறை பாடுகளை களைவதாக உயர் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, ஜூன் 30 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவிருந்த சிஐடியு நியாய விலை கடை ஊழியர் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அதிகாரிகளை கூட்டுறவு பணியாளர் சங்க மாநிலத்தலைவர் பி.கௌத மன் மற்றும் மாநில துணைத் தலைவர் பி. சுரேஷ், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் சிவக் குமார், பழனிச்சாமி, கணேஷ் குமார், பால முருகன் ஆகியோர் சந்தித்து முறையிட்ட னர்.</p>
