மாசு கட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிப்பு: பிரிண்டிங் சங்கம்
24 Sept 2026, 1:05 am

மாசு கட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிப்பு: பிரிண்டிங் சங்கம்

திருப்பூர், செப். 23 -மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மின் துண்டிப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பிரிண்டிங் நிறுவனங்களை இயக்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்என்றும் திருப்பூர் டெக்ஸ்டைல் பிரிண்டிங் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

திருப்பூர் டெக்ஸ்டைல் பிரிண்டிங் சங்கத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் புதனன்று மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.

இதுகுறித்து டெக்ஸ்டைல் பிரிண்டிங் சங்கத் தலைவர் ரத்னகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 10 மாத காலமாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகளால் பல பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுதொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளுக்குட்பட்டு தேவையான அனைத்து கட்டணங்களையும் செலுத்தி,ரசீதுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து படிவங்களையும் சமர்ப்பித்துள்ளோம். இருப்பினும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்கவோ அல்லது புதிய மின் இணைப்புகளுக்கு அனுமதி அளிக்கவோ அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். ’காத்திருங்கள்’ எனக் கூறி 10 மாதங்களாக காலத்தை கடத்தி வருகின்றனர்.சுத்திகரிப்பு ஆலைகளை இயக்கி வரும் நிலையிலும், சிறிய தவறுகள் ஏதேனும் இருந்தால் அதுகுறித்து முன் தகவல் எதுவும் தராமல் அதிகாரிகள்நேரடியாக வந்து புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை எடுத்துச் சென்று மின் இணைப்பை துண்டித்து விடுகின்றனர்.

தற்போது தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நிறுவனங்களில் போதுமான ஆர்டர்கள் கைவசம் உள்ளன. ஆனால் மின் இணைப்பு இல்லாத காரணத்தால் பணிகளை மேற்கொள்ள முடியாமல் 80% முதல் 90% வரை தொழில்கள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில்ஆயிரக்கணக்கான பிரிண்டிங் நிறுவனங்களும், அவற்றை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர். மின் இணைப்பு துண்டிப்பால் உரிமையாளர்கள் மட்டுமின்றி, ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன என்றார்.

மேலும், மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் உடனடியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரி

யத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடர்புகொண்டு பேசி, இப்பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை உடனடியாக வழங்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக பிரிண்டிங் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.