மலை போல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பை: தினமும் தொல்லையில் சிக்கித் தவிக்கும் மக்கள்
19 Jun 2026, 12:17 am

மலை போல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பை: தினமும் தொல்லையில் சிக்கித் தவிக்கும் மக்கள்

திருப்பூர், ஜூன் 18 - திருப்பூர் மாநகராட்சி 29 ஆவது வார்டுக்குட்பட்ட போஸ்டல் காலனி பகுதியில், மலை போல் குப்பையை கொட்டி வைத்திருப்ப தால் மிக மோசமான துர்நாற்றம், ஈக்கள், பூச்சிகள் தொல்லை ஏற் பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக குடியிருப்புவாசிகள் கூறினர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் சௌடாம்பிகை அம்மன் திருமண மண்டபம் பின்புறம் 29ஆவது வார் டுக்குட்பட்ட போஸ்டல் காலனி யில், கடந்த பல மாதங்களாக சுற்று வட்டார வார்டு பகுதிகளில் சேகரமா கும் குப்பையை கொண்டுவந்து ஒரே இடத்தில் கொட்டி வைத்துள் ளனர்.

குறிப்பாக மாநகரக் குப்பையை சுற்று வட்டார பாறைக் குழிகளில் கொட்டுவதற்கு மக்கள் எதிர்த்து போராடியதால், குப்பை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மாநகரில் ஆயிரக்கணக்கான டன் குப்பை தேங்கி பெரும் பிரச்சனை யாக உருவெடுத்தது. இ

ந்த சூழ்நிலையில் குடியி ருப்பு பகுதிகளில் முதல் நிலை குப்பை சேகரிப்பு செய்து, அவற்றை வார்டு அளவில் இரண் டாம் நிலை குப்பை சேகரிப்பு மையங்களில் மொத்தமாக கொட்டி வைத்தனர்.

பிறகு அங்கிருந்து திடக் கழிவு மேலாண்மை மையங்க ளுக்கு கொண்டு சென்று அவற்றை தரம் பிரித்து முறைப்படி அப் புறப்படுத்தும் வேலையை மேற் கொண்டனர். இதன்படி 29ஆவது வார்டில் போஸ்டல் காலனி பகுதியில் குப்பையை கொட்டியுள்ளனர்.

அஞ்சல் துறைக்கு சொந்தமான இடத்திற்கு அருகில் சாலையாக இருந்த இடத்தை அடைத்து அங்கு இந்த குப்பை கொட்டப்பட்டுள்ளது என்று மக்கள் தெரிவித்தனர். குப்பை கொட்ட தொடங்கியபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.

எனினும் குப்பை கொட்டு வதற்கு இடமில்லாத நிலையில் தற்காலிகமாக இங்கு குப்பை கொட்டுவதாகவும், இங்கிருந்து குப்பையை அகற்றி எடுத்துச் சென்று விடுவோம் என்று மாநக ராட்சி சுகாதாரத்துறை அலுவலர் கள் கூறியுள்ளனர்.

ஆனால் பல மாதங்களாக இங்கு குப்பை கொட்டி வருகின்ற னர். மருந்து தெளிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்வ தில்லை.

இதனால் துர்நாற்றம் மூக்கை துளைக்கிறது. சுற்றிலும் உள்ள வீடுகளிலும், அலுவலகங் கள், தொழிற்சாலைகளிலும் யாருமே இருக்க முடிவதில்லை. அத்துடன் பெரிய அளவிலான ஈக் கள், பூச்சிகள் உருவாகி வீடுகளில் மிகப்பெரும் தொல்லையாக உள் ளன.

சுகாதார சீர்கேடு நோய் தாக்கு தல் அபாயம் மிகப்பெரிய அளவில் உள்ளது என்றும் மக்கள் தெரிவித்த னர்.

அதுமட்டுமின்றி குப்பை கொட் டும் இடத்தின் கிழக்குப் பகுதியில் வெங்கடேஸ்வரா நகர், சாதிக் பாஷா நகர் என மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலும் குப்பையில் இருந்து உருவாகும் துர்நாற்றம், பூச்சித்தொல்லை பரவி உள்ளது. இ

ப்பிரச்சனை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பா. சௌந்தரராசன், மாநகரக் குழு உறுப்பினர்கள் நாகராஜன், பால சுப்பிரமணியம், கிளைச் செயலா ளர்கள் சின்னச்சாமி, தியாகராஜன் உள்ளிட்ட கட்சி அணியினர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

பாதிப்பை சந்தித்து வரும் மக்களை சந்தித்து இதுகுறித்து கேட்டறிந்தனர். இப்பிரச்சனை தொடர்பாக 29 ஆவது வார்டு கவுன்சிலர் சின்னச் சாமியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குப்பை கொட்ட இடம் இல்லை, இங்குதான் கொட்ட முடியும். கு

றிப்பிட்ட காலத்தில் குப்பையை மாநகராட்சி அகற்றி விடும் என்று பதில் கூறியதாக இப் பகுதி மக்கள் கூறினர்.

பிரச் சனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டி போராட்டத்திற்கு தயாராக இருப்பதாகவும் குடியி ருப்புவாசிகள் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர், இவ்விஷயத்தில் மாநக ராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்று குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த னர்.

மாநகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக மக்களை திரட்டி போராட் டம் நடத்துவது உள்ளிட்ட நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று மார்க் சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன் கூறினார்.