பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: கண்காணிப்புக்குழு அமைக்க வலியுறுத்தல்
12 May 2026, 1:24 am

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: கண்காணிப்புக்குழு அமைக்க வலியுறுத்தல்

திருப்பூர், மே 11- திருப்பூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் பயன்பாடு அதிகரித்துள்ள தால், கண்காணிப்பு குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக் கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தேசிய சட்ட உரிமைகள் கழகம், தேசிய ஊழல் எதிர்ப்பு கழகம் சார் பில் அளிக்கப்பட்ட மனுவில், தமிழ் நாடு முழுவதும் ஒருமுறை பயன் படுத்தும் பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள் ளது.

ஆனால், திருப்பூர் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருப்பதாகவும், மார்க்கெட், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதி களில் 75 மைக்ரானுக்கும் குறை வான பிளாஸ்டிக் பைகள் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது.

இது சாக் கடை கால்வாய்களில் அடைப்பு ஏற் படுத்துவதோடு, குப்பையில் போடப்படும்போது கால்நடை களும் அதை உட்கொண்டு பாதிப்பு ஏற்படுகிறது. எ

னவே மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு குழுக் கள் அமைத்து ஆய்வு நடத்தி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தினர்.

நிலத்தை அபகரிக்க முயற்சி திருப்பூர் மாவட்டம், கண்டியன் கோவில் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி சரசாள் (86) அளித்த மனு வில், தனக்கும் தனது சகோதரர் கள் இருவருக்கும் என 3 பேருக்கு சொந்தமான பூர்வீக நிலம் உள் ளது.

இந்த இடத்தை விற்பனை செய்ய மூவரும் முடிவெடுத்து, அதன் விலையாக ரூ.37 லட்சம் ஒப் பந்தம் செய்யப்பட்டு ஷாஜகான் என்பவருக்கு விற்கப்பட்டது.

இதில் முன்பணமாக ரூ.3 லட்சம் பெற்ற நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நிலத்தைப் பதிவு செய்து மீதமுள்ள தொகையை வங்கி பரிவர்த்தனை மூலம் தருவதாக கூறியிருந்தனர்.

இதனை நம்பி கைரேகை வைத்து கிரையம் செய்து கொடுத்த நிலை யில் தனக்கு வரவேண்டிய பங்கு தொகையான 8.33 லட்சம் ரூபாயை தராமல் காலம் தாழ்த்தினர்.

இது குறித்து கேட்டபோது ஆபாசமாக பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.

எனவே தனது நிலத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்ட ஷாஜகான் மற்றும் அதற்கு துணையாக இருக் கும் தனது உறவினர்கள் மீது நட வடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்.

மற்றும் சட்ட பாது காப்பு வழங்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளார்.

அடிப்படை வசதி கோரிக்கை பல்லடம் வட்டம், கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், இச்சிப்பட்டி ஊராட்சியில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

அங்கு 68 குடும் பங்களும் வீடு கட்டி குடியிருந்து வரக்கூடிய நிலையில் அங்கு தண்ணீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்டவை இல்லாமல் உள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர் முதல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக் கப்பட்டுள்ளோம்.

உடனடியாக அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வெற்றி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், திருப் பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனா ளிகள் 100 நாள் வேலை திட்டத்தை வாழ்வாதாரமாக கொண்டு பயன் அடைந்து வருகின்றனர்.

அவர்க ளுக்கு இடைவிட்டு வேலை வழங்கு வதால் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது.

எனவே 100 நாள் தொடர்ந்து வேலை பதிவு செய்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர்.

விரைவில் சான்றிதழ் வழங்குக நல்லூர் நுகர்வோர் நல மன் றத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் அளித்த மனுவில், தற்போது பள்ளி களில் மாணவர் சேர்க்கை நடை பெற்று வரக்கூடிய நிலையில் மாண வர் சேர்க்கைக்கு தேவையான வரு மானம், இருப்பிடம் மற்றும் ஜாதி சான்றிதழ்களை வழங்குவதில் அதி காரிகள் கால தாமதம் செய்கின்ற னர்.

15 நாட்களுக்கு முன்னர் சான்றி தழ் கேட்டு விண்ணப்பித்த பலருக் கும் தேர்தல் பணியை காரணம் கூறி இதுவரை வழங்கப்படவில்லை.

எனவே மாணவர்களின் நலன் கருதி சான்றிதழ் விண்ணப்பங்களை முன்னுரிமையுடன் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் நுகர்வோர் நல முன் னேற்ற சங்கம் சார்பில் அளிக்கப் பட்ட மனுவில், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல கத்தில் ஒன்றிய அரசின் டிஎன் ரைட்ஸ் திட்டத்தில் 170 பெண் களப் பணியாளர்கள் தேர்வு செய்யப் பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண் பணியாளர்களிடம் பாலியல் அத்துமீறல்கள் நடை பெற்று வருகிறது.

அலுவல் நேர மில்லாத போதும் வீடியோ கால், ஆபாச குறுஞ்செய்தி என இன்னல் களுக்கு உட்படுத்துகின்றனர்.

இது குறித்து புகார் அளித்தாலும் எங் களை ஒன்றும் செய்திட முடியாது என மிரட்டுவதாகவும், அத்தகைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மாற்றுத்திற னாளிகள் நலத்துறையில் விசாகா குழு அமைத்து ரகசிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.