தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூன்று மாதமாக ஓய்வூதியம் வரவில்லை! பிஎப் மண்டல அலுவலகம் முற்றுகை

7 Oct 2026, 12:28 am
மூன்று மாதமாக ஓய்வூதியம் வரவில்லை! பிஎப் மண்டல அலுவலகம் முற்றுகை

மூன்று மாதமாக ஓய்வூதியம் வரவில்லை! பிஎப் மண்டல அலுவலகம் முற்றுகை

திருப்பூர், அக்.6 -கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் ஓய்வு ஊதியம் கிடைக்கவில்லை என்று சொல்லி சுமார் 40 ஓய்வூதியர்கள் திருப்பூர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தை செவ்வாயன்று முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் கூறுகையில், நாங்கள் மிக சொற்பமான ஓய்வூதிய தொகைதான் பெற்று வருகிறோம். அந்தத் தொகை கூட கடந்த ஜூலை மாதம் முதல்இப்போது வரை கிடைக்கவில்லை. இந்த தொகையை நம்பித்தான் எங்களது மருத்துவம், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை செய்து வருகிறோம். பிஎப் அலுவலகத்திற்கு வந்து கேட்டால், உரிய பதில் சொல்லாமல் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக அடிக்கடி வந்து கேட்கும்போது சர்வர் பிரச்சனை உள்ளது சரி செய்தவுடன் ஓய்வூதியம் கிடைத்துவிடும் என்று கூறி அலைக்கழித்து வருகின்றனர்.

எனவே, இன்று (செவ்வாய்க்கிழமை) பிஎஃப் மண்டல அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக வந்தோம். பிஎப் மண்டல ஆணையர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சர்வர் பிரச்சனை, புதிய ஆட்கள் மாறி இருப்பது ஆகிய காரணங்களால் தாமதமாகிறது. அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் பிரச்சனை சரி செய்யப்பட்டு ஓய்வூதியம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

அவர் தெரிவித்தபடி 15ஆம் தேதிக்குள் ஓய்வூதியம் கிடைக்காவிட்டால் நாங்கள் இங்கு வந்து அடுத்த கட்டபோராட்டத்தை நடத்துவோம் என்றுதெரிவித்தார். கூட்டுறவுத்துறை ஓய்வூ

தியர் சங்க மாவட்டத் தலைவர் ப.கௌதமன் உட்பட ஓய்வூதியர்கள் திரளானோர்கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.