பெரியார் நகர் பகுதி மக்களுக்கு பேருந்து வசதி: சிபிஎம் கோரிக்கை
6 Jul 2026, 10:10 pm
<p><strong>பெரியார் நகர் பகுதி மக்களுக்கு பேருந்து வசதி: சிபிஎம் கோரிக்கை</strong></p><p>திருப்பூர், ஜூலை 6 - திருப்பூர் மாநகராட்சி 41 வது வட் டம் தந்தை பெரியார் நகர் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரி டம் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மற்றும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் மனு அளித்தனர். இதில், தந்தை பெரியார் நகர் பகு தியில், அரசு வழங்கிய வீட்டு மனை பட்டாக்களை பெற்று 500க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். 3000 க்கும் அதிகமானோர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகின்றனர். இந்த ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்வதற்கும், முரு கம்பாளையத்தில் உள்ள நியாய விலை கடைக்கு செல்வதற்கும், இடு வம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்று வருவதற்கும், திருப்பூரில் உள்ள கல்லூரிகளுக்கு மேல் படிப்புக்கு செல்வதற்கும், இன்ன பிற அவசர அத்தியாவசிய தேவைக ளுக்கு வெளியே செல்வதற்கு எந்த பேருந்து வசதியும் இல்லை. இத னால் இங்கு வசிக்கும் ஆயிரக்கணக் கான மக்கள் கடும் சிரமத்தை சந்திக் கின்றனர். எனவே தந்தை பெரியார் நகர் பகுதிக்கு புதிய அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் கவனம் எடுத்து பேருந்து வசதியை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள் ளனர். இந்த மனு அளிக்கும் இயக்கத் தில், சிபிஎம் சார்பில் பி.கருப்புசாமி, ஆர். பொன்னுசாமி, மாதர் சங்கத் தின் சார்பில் ஈ.அங்குலட்சுமி உள்ளிட் டோர் இதில் கலந்து கொண்டனர். அடிப்படை வசதி கோரிக்கை இதேபோன்று, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், கொடுவாய் அருகே நிழலி கிராமம் சமத்துவபு ரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள் மாலை நேரங்களில் வீடு வருவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கொடுவாய் கட்சி கிளை சார்பாக மனு அளிக்கும் இயக்கத் தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பவித்ராதேவி, ஒன் றியச் செயலாளர் ஆர்.பாலன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
