தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்க மாநாடு

11 Jul 2026, 10:48 pm
திருப்பூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்க மாநாடு
<p><strong>திருப்பூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்க மாநாடு</strong></p><p>​​​​​​​திருப்பூர், ஜுலை 11- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் மாநாடு பெருமா நல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் சனியன்று நடைபெற்றது. இதில், நிர் வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் வடக்கு ஒன்றிய 2 ஆவது மாநாடு, வடக்கு ஒன்றியத் தலைவர் கே.ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி வேலையறிக்கையும், பொருளாளர் ஆறு முகம் வரவு செலவு அறிக்கையையும் முன் வைத்தனர். அவினாசி ஒன்றியச் செயலாளர் எஸ். வெங்கடாசலம், சிஐடியு பஞ்சாலை சங்க மாவட்டத் தலைவர் கே.பழனிசாமி, விதொச வடக்கு ஒன்றியச்செயலாளர் ஆர். சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், அவிநாசி - அத்திக்கடவு திட்டத் தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்ப தோடு, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி குட்டைக்கு நீர் நிரப்ப வேண்டும். தெருநாய் களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு சந்தை மதிப்பில் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். பூலுவபட்டி கால்நடை மருந்தகத்தில் தட்டுப்பாடின்றி வெறிநாய்க் கடி தடுப்பூசி இருப்பு வைக்க வேண்டும். வாவிபாளையம் வருகைதரு கால்நடை மருத்துவக் கிளை நிலையத்தை செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்; பொங்கு பாளையத்தில் புதிய கால்நடை மருத்துவ மனை அமைக்க வேண்டும். பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்நேர மும் பாம்புக்கடி மருந்து இருப்பு வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் மாநாட்டில் தலைவராக கே.ரங்கசாமி, செயலாளராக எஸ்.அப்புசாமி, பொருளாள ராக ஆர்.ஆறுமுகம், துணைத் தலைவராக எம்.கே.கோவிந்தசாமி, துணைச் செயலாள ராக ஏநடராஜ் உள்ளிட்டு 13 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டனர். இறுதி யாக மாவட்டச்செயலாளர் ஆர்.குமார் நிறைவு ரையாற்றினார். முடிவில், பட்டம்பாளையம் ஏ.நடராஜ் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.