தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் வடக்கு சிபிஐ வேட்பாளர் எம்.ரவி வேட்புமனு தாக்கல்

4 Apr 2026, 4:02 pm
திருப்பூர் வடக்கு சிபிஐ வேட்பாளர் எம்.ரவி வேட்புமனு தாக்கல்
<p><strong>திருப்பூர் வடக்கு சிபிஐ வேட்பாளர் எம்.ரவி வேட்புமனு தாக்கல்</strong></p> <p>திருப்பூர், ஏப்.4 - திருப்பூர் வடக்குத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.ரவி &nbsp;சனியன்று வேட்புமனுத் தாக்கல் செய் தார். &nbsp;திருப்பூர் வடக்கு தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் &nbsp;எம்.ரவி என்ற சுப்பிரமணியம் போட்டி யிடுகிறார். அவர் திருப்பூர் வேலம் பாளையத்தில் உள்ள முதலாவது மண் டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவப்பிரகாஷிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். முன்னதாக அ.புதூர் கருப்பரா யன் கோயில் பகுதியில் இருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண் டர்களுடன் மேளதாளங்கள் முழங்க &nbsp;ஊர்வலமாக வந்தார். பாஜக மோடி அர சின் தவறான கார்ப்பரேட் ஆதரவு &nbsp;கொள்கையால் திருப்பூர் பனியன் &nbsp;தொழில், நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலையேற்றத்தால் கடும் &nbsp;நெருக்கடியில் சிக்கியுள்ளது. தவறான வெளியுறவு கொள்கையால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட வாசங்கங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியும் வந்த னர். அப்போது திருப்பூரில் பனியன் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. &nbsp;ஆனால் இதற்கு முக்கிய மூலப் பொருளான நூல் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு கிலோவிற்கு நூல் விலை &nbsp;ரூ.12 உயர்ந்தது. இதனை கண்டிக்கும் &nbsp;விதமாகவும், நூல் விலையை குறைக்க வலியுறுத்தியும், நூல் விலை &nbsp;உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக் காத ஒன்றிய அரசைக் கண்டித்தும் நூல் &nbsp;மாலை அணிந்தபடி அவர் வேட்பு மனு &nbsp;தாக்கல் செய்ய வந்தார். &nbsp;இதில் சுப்பராயன் எம்பி, வடக்குத் &nbsp;தொகுதி தேர்தல் பணிக்குழுத் தலை வர், வடக்கு மாநகர திமுக செயலா ளர் தங்கராஜ், தேர்தல் பணிக்குழுச் செயலாளர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ரங்கராஜ் மற்றும் காங்கிரஸ் மாநகர் மாவட்ட செயலாளர் கோபால்சாமி, ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.