முந்தய பக்கம்

திருப்பூர் வடக்கு: சிபிஐ வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

11 Apr 2026, 5:30 am
திருப்பூர் வடக்கு: சிபிஐ வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருப்பூர் வடக்கு: சிபிஐ வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருப்பூர், ஏப்.10- திருப்பூர் வடக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.ரவி, தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மண்ணரை பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து தனது பயணத்தைத் தொடங்கிய அவர், மண்ணரை, சிவசக்தி நகர், பாரப்பாளையம், கோல்டன் நகர், சஞ்சய் நகர், முத்து நகர் மற்றும் தியாகி குமரன் காலனி உள்ளிட்ட முப்பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மாநகராட்சியின் 30 முதல் 33 வரையிலான வார்டுகளில் வாக்கு சேகரித்த அவர், வெள்ளியன்று பி.என்.ரோடு, எஸ்.வி. காலனி, ராஜாஜி நகர், பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் முருகானந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு கேட்டார்.

இந்த பிரச்சாரத்தில் திமுக, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொதுவாக விடையே வேட்பாளர் எம்.ரவிக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram