தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

8 Jun 2026, 11:09 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழப்பு; ஓட்டுநர் கைது

திருப்பூர், ஜூன் 8- திருப்பூர் காங்கேயம் சாலையில் இருசக்கர வாகனத் தின் மீது லாரி மோதிய விபத்தில், கணவனுடன் சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிரிழந்தார். திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி பிரியங்கா. இத்தம்பதியினர் திங்களன்று தங்களது இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் அருகே வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கோழித் தீவனம் ஏற்றிக்கொண்டு மூலனூர் நோக்கிச் சென்ற லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனத் தின் பின்பகுதியில் பலமாக மோதியது. இந்த விபத்தில் வாக னத்தின் பின்னால் அமர்ந்திருந்த பிரியங்கா தூக்கி வீசப் பட்டு, லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பார்த்திபன் லேசான காயங்களு டன் தப்பினார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தா மல் அதிவேகமாக ஓட்டிச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்த நல்லூர் காவல் துறையினர் லாரியை துரத்திச் சென்று வழி மறித்து, வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் குற்றச்சாட்டு இவ்விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “காங்கேயம் சாலையின் ஓரங்களை ஆக்கிரமித்து நடை பாதை வியாபாரிகள் அதிகளவில் கடைகளை அமைத்துள்ள னர். இதனால் இந்த முக்கியச் சாலையில் கடும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுவதுடன், தினசரி விபத்துகளும் தொடர் கதையாகி வருகின்றன. சாலை ஓர ஆக்கிரமிப்புகளை உடன டியாக அகற்றினால் மட்டுமே, நெருக்கடி மிக்க இப்பகுதி யில் விபத்துகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முடி யும்” என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்தப்பணி

திருப்பூர், ஜூன் 8- திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையங்க ளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மருத்து வர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் (நிலை 2), ஆய்வக நுட்புநர் (நிலை 3), பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், பல் மருத்துவர், பிசியோதெரபிஸ்ட், ஆடியாலஜிஸ்ட், டெக்னீ ஸியன், ஆலோசகர், கணக்கு உதவியாளர் உள்ளிட்ட பணி யிடங்கள் மாவட்ட நலச்சங்கத்தின் மூலம் நிரப்பப்படும். இப் பணி முற்றிலும் தற்காலிகமானது. விருப்பமுள்ளவர்கள்

என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங் களுடன் வரும் 29.06.2026-க்குள் ‘நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 147-பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர்- 641 602’ என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியக் குறைப்பை கண்டித்து பிளிப்கார்ட் மினிட்ஸ் டெலிவரி ஊழியர்கள் திருப்பூர் ஆட்சியரிடம் மனு

திருப்பூர், ஜூன் 8: ப்ளிப்கார்ட் மினிட்ஸ் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் திடீரென செய் யப்பட்ட ஊதிய குறைப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, அந்நிறுவனத்தின் டெலிவரி ஊழியர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங் களன்று மனு அளித்தனர். அம்மனுவில், திருப்பூர் மாநகரில் பிளிப்கார்ட் மினிட்ஸ் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் டெலிவரி ஊழியர்களாக பல ஆண்டு களாக பணியாற்றி வருகிறோம். இந் நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட எங்களது ஊதியம், எவ் வித முன்னறிவிப்புமின்றி நிறுவன தரப் பால் பெருமளவு குறைக்கப்பட்டுள் ளது. குறிப்பாக, டெலிவரி ஊழியர்க ளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை, பயணப்படி மற்றும் கூடுதல் பணி நேரத்திற்கான அடாக் சர்ஜ் தொகை போன்றவை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளன. தற்போது பெட் ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், இந்த திடீர் ஊதிய குறைப்பு எங்களது வாழ்வாதாரத்தை கடுமை யாக பாதித்துள்ளதுடன், தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்களுக்கு ஏற் கனவே வழங்கப்பட்டு வந்த பழைய ஊதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதேபோல், கூடுதல் பணி நேரத் திற்கு உரிய கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்; பணியின் போது விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு மருத்துவச் செலவையும் நிறுவனமே ஏற்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஊழி யர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராஜ வாய்க்கால் தூர் வார கோரிக்கை

திருப்பூர், ஜூன் 8 – மடத்துக்குளத்தையடுத்து காரத்தொழவுராஜவாய்க் கலை தூர் வார வேண்டும் என திருப்பூர் ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று விவசாயிகள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த காரத்தொழவு ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள் ளது. இதனை நம்பி உள்ள 12 கிலோமீட்டர் சுற்றளவில், ஆயி ரம் ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்கள் பாசன வசதி பெறமுடி யாமல் உள்ளது. இதனால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ராஜ வாய்க்காலை தூர்வாரி குடிமராமத்துப்பணிகளை செய்து தர வேண்டும் என காரத்தொழுவு அமராவதி பழைய ராஜவாய்க்கால் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் ஆட்சி யர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மலைவாழ் மக்கள் கோரிக்கைகள் இரண்டு மாதங்களில் நிறைவேறும்: அமைச்சர்கள் உறுதி

திருப்பூர், ஜூன் 8 - மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் ஒன்றிய அரசின் விதிகளுக்கு ஏற்ப மாநில அர சின் பணிகளை வருவாய் துறை மூலம் இரண்டு மாதத்தில் நிறைவேற்றப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டை யன் தெரிவித்தார். திருப்பூரில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத் தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், கமலி ஆகியோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் கூறுகை யில், இந்த கூட்டத்தில், குப்பை, சாயப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனை கள் விவாதிக்கப்பட்டது. சாயப்பட்டறை சங் கத்துடன் இணைந்து விவாதித்து கழிவுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை மேற் கோள்ளப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் ஒன்றிய அரசின் விதிகளுக்கு ஏற்ப மாநில அர சின் பணிகளை வருவாய் துறை மூலம் இரண்டு மாதத்தில் நிறைவேற்றப்படும். வேளாண் துறை அலுவலர்கள் உடன் ஆய் வுக்கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக் கப்படும். கால்நடைத்துறை அமைச்சர் கமலி கூறுகையில், தெரு நாய்கள் கடித்து வளர்ப்பு கால்நடைகள் உயிரிழக்கும் பிரச்சனை தொடர்பாக உரிய நிவாரணம் வழங்க விவா தித்து வருகிறோம். உரிய நிவாரணம் வழங் கப்படும். அதே போல் தெரு நாய்கள் கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாலத்திலிருந்து குதித்து வாலிபர் உயிரிழப்பு

திருப்பூர், ஜூன் 8: திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் முன்புள்ள மேம்பாலத்திலிருந்து திங்களன்று காலை வாலிபர் ஒருவர் கீழே குதித்து தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் முன் பாக உள்ள மேம்பாலத்தின் மீது இன்று காலை 8 மணியளவில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந் தார். அவர் பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகள் நுழையும் முக்கிய நுழைவா யில் பகுதிக்கு அருகே சென்றபோது, யாரும் எதிர்பாராத விதமாக மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் ஏறி திடீரென கீழே குதித்தார். கண் இமைக்கும் நேரத்தில் உயரே இருந்து கீழே விழுந்த அந்த வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள் ளத்தில் துடிதுடித்தார். பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியிலேயே விழுந்ததால், அங்கு நின்றிருந்த பயணிகள் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பலத்த காயம டைந்த அந்த வாலிபர் சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற் கொலை செய்து கொண்ட வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், தற்கொலைக்கான கார ணம் என்ன என்பது குறித்து தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.