சிறந்த பறவைகள் சரணாலயமாக மாறுகிறது திருப்பூர் நஞ்சராயன் குளம்!
1 hour before

சிறந்த பறவைகள் சரணாலயமாக மாறுகிறது திருப்பூர் நஞ்சராயன் குளம்!

திருப்பூர், அக்.18 - திருப்பூர் மாநகருக்கு அருகே பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள, சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தில், படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நாட்டின் சிறந்த பறவைகள் சரணாலயமாக மாறுகிறது நஞ்சராயன் குளம்.வெற்றி அறக்கட்டளை முன்னெடுத்து வரும் இப்பணிகளை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோர் சனிக்கிழமை காலை 7 மணிக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, வெற்றி அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளை பாராட்டிய அதிகாரிகள், நஞ்சராயன் குளத்தை சிறந்த பறவைகள் சரணாலயமாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். நஞ்சராயன் குளத்தின் சூழலியல் தன்மையை பாதுகாக்கவும், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்தவும் வெற்றி அறக்கட்டளை சார்பில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணி கடந்த, ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வரும் இப்பணியில் இதுவரை ரூ.32 லட்சத்துக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளையும் நிறைவு செய்யும்போது மொத்த செலவு சுமார் ரூ.40 லட்சமாக இருக்கும் என வெற்றி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளை பார்வையிடுவதற்காக நடைபெற்ற ஆய்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, ஆனைமலை புலிகள் காப்பகம் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், கள இயக்குனர் வெங்கடேஷ், ஆனைமலை புலிகள் காப்பகம் (திருப்பூர் கோட்டம்) துணை இயக்குனர், மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் போஜே உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். வெற்றி அறக்கட்டளை தலைவர் டி.ஆர்.சிவராம் மற்றும் தன்னார்வலர்கள், கொடையாளர்களும் பங்கேற்றனர்.

அப்போது, குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகள் எவ்வாறு அகற்றப்படுகின்றன, அகற்றப்பட்ட தாவரங்கள் குளத்திலிருந்து எவ்வாறு வெளியேற்றப்படுகின்றன, அவை எவ்வாறு முறையாக அப்புறப்படுத்தப்படுகின்றன என்பன உள்ளிட்ட பணிகள் அதிகாரிகளுக்கு நேரடியாக விளக்கி காட்டப்பட்டன.

குளத்தின் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கு வெற்றி அறக்கட்டளை மேற்கொண்டு வரும் முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டினர்.நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட வன அலுவலர் ராஜேஷ், வனப் பாதுகாப்பு காவலர் வெங்கடேஷ் ஆகியோர் வெற்றி அறக்கட்டளை ‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்டத்தின் கீழ் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து பாராட்டி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணரே, உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. ஆனால், யார் வாழ வேண்டும்,யார் அழிய வேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடிய நிலையில் மனிதகுலம் மட்டுமே உள்ளது.

எனவே, மனிதர்கள் அறிவார்ந்த முறையில் செயல்பட்டு, இயற்கையை பாதுகாப்பதுடன், உயிர் சூழலின் ஓர் அங்கமாக விளங்கும் பிற உயிரினங்களையும் பேணி பாதுகாக்க வேண்டும். இது மனிதர்களின் முக்கிய கடமை என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.மேலும், நஞ்சராயன் குளத்தை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட முன்மாதிரி பறவைகள் சரணாலயமாக உருவாக்குவதற்கான திட்ட கருத்துருக்களை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிய அனுமதிகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் பெற்று சரணாலயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார்.

மேம்படுத்துவது அவசியம்நஞ்சராயன் குளம் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் 17-ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சணாலயத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய சிறந்த இயற்கை சுற்றுலாத் தலமாகவும், பறவைகளை பார்வையிடுவதற்கான முக்கிய மையமாகவும் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பல்வேறு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி, பறவைகளை அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் அமர்ந்து ரசிப்பதற்கான பார்வையாளர் அரங்குகள், பறவைகள் மற்றும் சூழலியல் குறித்த தகவல்களை அறிந்துகொள்வதற்கான பயிற்சி மையம், பொதுமக்கள் ஓய்வெடுப்பதற்கான வசதிகள், குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய அனுமதிகளை பெற்று தேவையான திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியரும், வனத்துறை அதிகாரிகளும் உறுதியளித்தனர்.நஞ்சராயன் குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், குளத்திற்குள் நீர் வரும் பகுதிகள் மற்றும் நீர் வெளியேறும் பகுதிகளில் மூங்கில் தடுப்புகளை அமைத்து, ஆகாய தாமரை உள்ளிட்டதாவரங்கள் நீரோட்டத்தின் வழியாக குளத்திற்குள் வந்து சேர்வதை கட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்ய வெற்றி அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

மேலும், ஆகாய தாமரைகள் மீண்டும் பெருகாமல் தடுப்பதற்கான கண்காணிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை அடுத்த 10 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து மேற்கொள்ள வெற்றி அறக்கட்டளை உறுதியளித்துள்ளது. இதன் மூலம், தற்போது மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணிகள் நீண்டகால பலனை அளிக்கும் வகையில் பராமரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நஞ்சராயன் குளத்தை தமிழ்நாட்டின் சிறந்த பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகவும், நாட்டின் முன்மாதிரி சூழலியல் பாதுகாப்பு மையமாகவும் உருவாக்க அரசுடன் இணைந்து வெற்றி அறக்கட்டளை தொடர்ந்து பாடுபடும் என அதன் நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.