முந்தய பக்கம்

நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

12 Aug 2026, 10:36 pm
நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.12-திருப்பூர் மண்டல நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் திருப்பூர் டீச்சர்ஸ் காலனியில் உள்ள மண்டல இயக்குநர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.அலுவலக நேரம் கடந்தும், விடுமுறை நாட்களிலும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்; கலந்தாய்வு மூலம்பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்; காலியிடங்களை உடனேநிரப்ப வேண்டும்; எல்லை விரிவாக்கப் பணியாளர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வெள்ளகோவில் நகராட்சி ஊழியர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தஆர்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவர் க.முருகானந்தம், மாநிலச் செயலாளர் பி.சுந்தரராஜன், துணை பொதுச்செயலாளர் ஆர்.குமரவேல், மாவட்டத் தலைவர் பாண்டியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். செல்வகுமார் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram