அமைச்சர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் ஆளுங்கட்சி கூட்டமாக மாறியது!
8 Jun 2026, 10:55 pm

அமைச்சர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் ஆளுங்கட்சி கூட்டமாக மாறியது!

திருப்பூர், ஜூன் 8 - திருப்பூரில் மாநில அமைச்சர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் அதிகாரிகளை பின்னுக்கு தள்ளி ஆளுங்கட்சியினர் அதிக அள வில் பங்கேற்றதால் இது ஆளுங்கட்சி கூட்டமாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வார விடுமுறை நாளில் வளர்ச்சிப்பணிகள் ஆய்வுக்கூட் டம் நடத்தியதால் அரசு ஊழியர்கள் அதி ருப்தி தெரிவித்தனர். தமிழக மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ், வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் கமலி ஆகியோர் பங்கேற்ற வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவ லர்களுடன் ஆய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் ஞாயிறன்று நடைபெற்றது. அமைச்சர்கள் பங்கேற்ற மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்தை ஆளுங்கட்சி கூட்டமாக நடத்தி இருக் கிறார்கள், அதிகாரிகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எப்படி மக்கள் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நட வடிக்கை எடுத்திருப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி னர். அதேசமயம் அதிகாரிகளை பொருத்தவரை வார விடுமுறை தின மான ஞாயிற்றுக்கிழமை 3 அமைச்சர் கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினால் நாங்கள் எங்கே விடுமுறையை கழிப் பது? ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை யில் வேலைப்பளு அதிகமாக உள்ள தால் தினமும் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டி உள்ளது. ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் தான் குடும்பத்தாரு டன் இருக்க முடியும். அன்றும் அமைச் சர்கள் கூட்டத்தை நடத்தினால் நாங்கள் என்ன செய்வது? இது தவறான முன் னுதாரணமாக மாறிவிடக்கூடாது. அவ சர அவசிய சூழ்நிலை இருந்தால் கூட் டம் நடத்தினால் பரவாயில்லை. சாதா ரணமாக நடத்த வேண்டிய கூட்டத்தை விடுமுறை நாட்களில் நடத்துவதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.