முந்தய பக்கம்

மனிதக்கழிவை கையால் அள்ள வைத்த சம்பவம் எஸ்சி/எஸ்டி ஆணையம் விசாரணை

5 Jun 2026, 10:09 pm
மனிதக்கழிவை கையால் அள்ள வைத்த சம்பவம்  எஸ்சி/எஸ்டி ஆணையம் விசாரணை
<p>திருப்பூர், ஜூன் 5- திருப்பூர் மாநகராட்சியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளரை, மனிதக் கழிவை கையால் அள்ள வைத்த சம்பவம் குறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் மாநில ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. திருப்பூர், கோவில் வழி பேருந்து நிலைய பொதுக் கழிப் பிடத்தில் தூய்மைப் பணியாளர் சந்திரன் என்பவரை கையுறை, முகக்கவசமின்றி மனிதக்கழிவை அள்ள வைத்ததாக சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சூப்பர்வைசர் கோபால் ஆகியோர் மீது சந்திரன் புகார் கூறினார். இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், இது தொடர் பாக விசாரணை மேற்கொண்டு 19ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தர விட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram