தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2 ஆவது நாளாக உள்ளாட்சி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

7 Oct 2026, 12:19 am
2 ஆவது நாளாக உள்ளாட்சி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

2 ஆவது நாளாக உள்ளாட்சி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

திருப்பூர், அக்.6- அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும், பணி நிரந்தரம்செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளட்சித் துறைஊழியர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், திருப்பூர் மாநகராட்சியில் தொடங்கியுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவதுநாளாக செவ்வாயன்றும் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதேபோல், திருப்பூர் மாநகராட்சியில் குறிப்பாக மூன்றாவது, நான்காவது மண்டலங்களிலும், வேறு சில வார்டு பகுதிகளிலும்தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். மாநகராட்சியில் மட்டும் சுமார் 750 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று இருப்பதாக சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தெரிவித்தார்.

உடுமலை

உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளாட்சி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறைஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ஈஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செயலாளர் தண்டபாணி, சிஐடியுஒருங்கிணைப்புக்குழு தலைவர் விஸ்வநாதன் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அவிநாசி

அவிநாசி தாலுகா அலுவலகம் முன்பும், திருமுருகன்பூண்டி பழைய நகராட்சி அலுவலகம் முன்பும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி. பழனிச்சாமி தலைமை

யில் நடைபெற்றது. திருமுருகன்பூண்டி நகராட்சி கிளையின் தலைவர், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், துணைத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன், பொது தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் ஆர்.பழனிச்சாமி, மாதர்சங்க ஒன்றிய துணைத் தலைவர் வி.தேவி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.